ஸ்னேகா படத்துக்கு யு.எஸ். விருது

By Staff

Sneha with Shaam
ஸ்னேகா, பிரசன்னா இணைந்து நடித்துள்ள அச்சமுண்டு அச்சமுண்டு இன்னும் தமிழகத்தில் ரிலீஸ் ஆகவில்லை. ஆனால் அதற்குள் அமெரிக்காவில் ஒரு விருதைத் தட்டி விட்டது.

அருண் வைத்தியநாதன் இயக்கியுள்ள படம்தான் அச்சமுண்டு, அச்சமுண்டு. அமெரிக்காவில் வசிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த இளம் தம்பதியைச் சுற்றி நடைபெறும் திரில்லர் கதை இது.

இந்தப் படத்தில் பிரசன்னாவும், ஸ்னேகாவும் அபாரமாக நடித்திருப்பதாக பேசப்படுகிறது. இப்படம் கடந்த 2 வருடமாக தயாரிப்பில் இருந்து வந்தது.

இந்த கோடையில்தான் இப்படம் தமிழகத்தில் திரைக்கு வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் ஒரு விருதை வாங்கி விட்டது அச்சமுண்டு அச்சமுண்டு.

அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள கார்டன் ஸ்டேட் திரைப்பட விழாவுக்கு அச்சமுண்டு அச்சமுண்டு படம் அனுப்பி வைக்கப்பட்டது.

அதில் சிறந்த உள்ளூரில் (அமெரிக்காவில்) தயாரிக்கப்பட்ட பொழுது போக்குப் படம் என்ற விருது அச்சமுண்டு அச்சமுண்டு படத்துக்கு கிடைத்துள்ளது.

ஏப்ரல் 5ம் தேதி இந்த விருது வழங்கப்பட்டதாக அருண் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

படம் வெளியாவதற்கு முன்பே விருதுக்கு பிள்ளையார் சுழி போட்டு விட்டது அச்சமுண்டு அச்சமுண்டு - அப்படியானால் இப்படத்துக்கு நிறைய விருதுகள் உண்டு என நம்பலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X