எடிசன் விருது வழங்கும் விழா… யார் யாருக்கு என்னென்ன விருது!

சென்னை : சிறந்த நடிகருக்கான விருது மாநாடு திரைப்படத்தில் நடித்ததற்காக நடிகர் சிம்புவிற்கு வழங்கப்பட்டது.

எடிசன் விருது வழங்கும் விழா கடந்த 13 வருடமாக சென்னையில் நடந்து வருகிறது. இதில் 14வது எடிசன் விருதுகள் வழங்கும் விழா நேற்று கோலாகலமாக நடந்து முடிந்தது.

இதில் பல்வேறு தலைப்புகளின் கீழ் பல விருதுகள் பல நட்சத்திரங்களுக்கு வழங்கபட்டது .

எடிசன் விருது

எடிசன் விருது

தமிழ் திரை கலைஞர்களை கவுரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் , எடிசன் விருது என்னும் புகழ்பெற்ற விருது வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் இந்த விருது உலக தமிழ் மக்களால் கொண்டாடப்படும் ஒரு விருதாகவும் , தமிழ் திரை கலைஞர்களுக்கு முக்கியமான அங்கீகாரமாகவும் பார்க்கப்படுகிறது. தாமஸ் ஆல்வா எடிசனின் நினைவாக இவ்விருது வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

சிறந்த நடிகர்

சிறந்த நடிகர்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த திரைப்படம் மாநாடு. தமிழ் சினிமாவில் இதுவரை இல்லாத வகையில் டைம்லூப் முறையில் இத்திரைப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. இப்படம் சிம்புவிற்கு ஒரு கம்பேக் கொடுக்கும் திரைப்படமாகவே அமைந்திருந்தது. மாநாடு படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் சிம்புவிற்கு எடிசன் விருது வழங்கப்பட்டது.

3 விருதுகள்

3 விருதுகள்

இயக்குநர் வெங்கட்பிரபுவிற்கு மாநாடு மற்றும் கசட தபற படத்திற்காக விருதும், அதே போல கசடதபற படத்திற்காக பிரேம்ஜிக்கும் எடிசன் விருது கிடைத்துள்ளது. இந்த விருதை இவர்களில் சார்பாக கங்கை அமரன் பெற்றுக் கொண்டுள்ளார். இந்த புகைப்படத்தை வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சிறந்த வில்லன்

சிறந்த வில்லன்

அதேபோல மாநாடு திரைப்படத்தில் நடித்த எஸ்.ஜே.சூர்யாவிற்கு இந்த ஆண்டுக்கான சிறந்த வில்லன் விருது வழங்கப்பட்டது. இந்த படத்தில் வந்தான் சுட்டான் ரீப்பீட்டு என்று எஸ்.ஜே.சூர்யா பேசிய வசனம் மிகப்பெரிய அளவில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

ஹரீஷ் கல்யாணுக்கு விருது

ஹரீஷ் கல்யாணுக்கு விருது

நடிகர் ஹரீஸ் கல்யாணுக்கு இந்த ஆண்டின் ஃபேவரைட் ஹீரோ மற்றும் சிறந்த ஹீரோவுக்கான எடிசன் விருதை ஓ மணப்பெண்ணே மற்றும் கசட தபற படத்திற்காக பெற்றார். மேலும், இந்த விருதை பெருவதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக விழா மேடையில் பேசினார். மேலும் பல்வேறு பிரிவுகளில் கீழ் பல நட்சத்திரங்களுக்கு விருது வழங்கப்பட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X