அமிதாப்புக்கு 2 வாழ்நாள் சாதனையாளர் விருதுகள்

ஹாங்காங்கில் வருகிற 22ம்தேதி ஆசிய திரைப்பட விழா நடக்கிறது. ஆசியாவில் தயாரிக்கப்பட்ட சிறந்த படங்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகள் மற்றும் இயக்குநர்களுக்கு இந்த விழாவில் விருது வழங்கப்படும்.
இந்த விழாவில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் வாழ்நாள் சாதனைக்கான விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறார்.
இதே போன்றதொரு வாழ்நாள் சாதனையாளர் விருது மஸ்கட் சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவிலும் அமிதாப்புக்கு வழங்கப்படுகிறது.
இதுபற்றிய விவரங்களை அமிதாப் தனது பிளாக்கில் வெளியிட்டுள்ளார்.
எத்தனையோ விருதுகள் பெற்றாலும், இதுபோன்ற சாதனையாளர் விருது பெருவது மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்றும் அமிதாப் கூறியுள்ளார். தற்போது ஓமனில் தங்கியுள்ளார் அமிதாப்.
Comments
amitabh bachan அமிதாப் பச்சன் சாதனையாளர் மஸ்கட் வாழ்நாள் விருது honkong life time achievement award muscat


Click it and Unblock the Notifications