தமன்னாவுக்கு சாந்தாராம் விருது

தமிழ்ப் படத்தில் பிரபலமாகியுள்ள போதிலும், தற்போது தெலுங்குப் படம் ஒன்றுக்காகத்தான் இந்த விருதைப் பெறுகிறார் தமன்னா.
தெலுங்கில் வெளியான 'கொஞ்சம் இஷ்டம் கொஞ்சம் கஷ்டம்' என்ற படத்தில் நடித்ததற்காக தமன்னாவுக்கு சாந்தாராம் விருது கிடைத்துள்ளது.
சித்தார்த்துடன் இணைந்து தமன்னா நடித்த இந்தப் படம் பெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் இயக்குநருக்கும் சாந்தாராம் விருது தரப்பட்டுள்ளது.
ராஜ்கமல் அகாடமி ஆப் சினிமாடிக் எக்ஸெலன்ஸ் என்ற அமைப்பு இந்த விருதுகளை, இந்தி இயக்குநர் அமரர் வி சாந்தாராம் நினைவாக வழங்கி வருகிறது.
தென்னிந்தியாவிலிருந்து இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட் ஒரே நடிகை தமன்னாதான் என்பது குறிப்பிடத்தக்கது.
விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வரும் டிசம்பர் 21-ம் தேதி மும்பையில் நடக்கும் பிரமாண்ட விழாவில் விருதுகள் வழங்கப்படும்.
இந்த விருது குறித்து கருத்து தெரிவித்த தமன்னா, "மிகவும் பெருமையாக இருக்கிறது. கிட்டத்தட்ட தேசிய விருது பெற்றதற்கு இணையான சந்தோஷத்தை உணர்கிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











