twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    127 அவர்ஸ் படத்திற்காக ரஹ்மானுக்கு விமர்சகர்கள் விருது: ஆஸ்கர் வாய்ப்பு பிரகாசம்

    By Chakra
    |

    AR Rahman
    லாஸ்ஏஞ்சல்ஸ்: டேனி பாய்ல்ஸின் 127 அவர்ஸ் படத்தின் 'இப் ஐ ரைஸ்' என்ற பாடலுக்காக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு விமர்சகர்கள் விருது கிடைத்துள்ளது. இந்தப் படத்தின் மூலம் அவருக்கு இரண்டாவது கோல்டன் குளோப் விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    டேனி பாய்ல் இயக்கத்தில் வெளியான ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்காக ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கர் விருதுகள் கிடைத்தந. அந்தப் படம் ஒட்டுமொத்தமாக 8 ஆஸ்கர்களை தட்டிச் சென்றது.

    தற்போது டேனி இயக்கி, ரஹ்மான் இசையமைத்துள்ள 127 அவர்ஸ் மலையேறும் ஆரன் ரால்ஸ்டன் என்பவர் பற்றிய கதையாகும்.

    இந் நிலையில் Critic's Choice எனப்படும் விமர்சகர்கள் விருதை 'இன்செப்ஷன்', 'தி சோஷியல் நெட்வொர்க்' ஆகிய படங்கள் தட்டிச் சென்றன.

    சிறந்த திரைக்கதை, சிறந்த படம், சிறந்த இயக்குனர், சிறந்த இசை ஆகியவற்றுக்கான விருதுகளை பேஸ்புக் நிறுவனர் பற்றிய இந்தப் படம் வென்றது. அதே போல லியார்னாடோ டி காப்ரியோ நடித்த இன்செப்ஷன் படம் அதிகபட்சமாக 6 விருதுகளை வென்றுள்ளது.

    பிராட்காஸ்ட் பிலிம் கிரிட்டிக்ஸ் அசோசியேஷன் வழங்கும் இந்த விருது வாங்குபவர்களுக்கு ஆஸ்கர் வாங்கும் வாய்ப்பு அதிகம் என்பது குறிபபிடத்தக்கது.

    English summary
    A. R. Rahman wins Critic's Choice award for Danny Boyle's film 127 hours. He has won the best original song trophy for the song ' If I rise'. He is expected to win his second golden globe for this movie. Normally people who get Critic's Choice award are having a bright chance to win Oscar. Will Rahman get his third Oscar?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X