பத்மஸ்ரீ..விவேக்குக்கு உற்சாக வரவேற்பு!

By Staff

Vivek
பத்மஸ்ரீ விருது பெற்றுத் திரும்பிய நகைச்சுவை நடிகர் விவேக்குக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பெரும் திரளான ரசிகர்கள் அவருக்கு ரோஜா மாலை அணிவித்து மேள தாளங்களுடன் வரவேற்று மகிழ்ந்தனர்.

சின்னக் கலைவாணர் எனப் புகழப்படும் நகைச்சுவை நடிகர் விவேக்குக்கு இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. டெல்லியில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் பிரதிபா பட்டீலிடம் இந்த விருதினைப் பெற்றார் விவேக்.

விருது பெற்ற கையோடு நேற்று சென்னை திரும்பிய அவர் தனது அலுவலகம் அமைந்துள்ள விருகம்பாக்கம் பகுதிக்கு வந்தார். ஏராளமான பொதுமக்களும், ரசிகர்களும் திரண்டு வந்து அவரை வரவேற்றனர். குறிப்பாக பெண்கள் ஏராளமாக வந்திருந்தனர். பட்டாசுகள் வெடித்து, பேண்டு வாத்தியங்கள் முழங்க அவரை வரவேற்றனர்.

தான் பெற்று வந்த பத்மஸ்ரீ விருதினை அவர்களிடம் காட்டிய விவேக், தன்னுடைய இந்த புகழுக்கும், கிடைத்த விருதுக்கும் மக்களின் ரசிப்புத் தன்மைதான் முக்கிய காரணம் என்றார். தனக்கு வாய்ப்பளித்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், உடன் நடித்த நடிகர் நடிகைகள் மற்றும் இதர தொழில் நுட்பக் கலைஞர்களுக்கும் இந்த விருதில் பங்குள்ளது என்று கூறிய விவேக் அவர்களுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

அவருக்கு ரசிகர் மன்றம் சார்பில் ஆளுயர மாலை, மலர்க்கிரீடம், செங்கோல் ஆகியவற்றை வழங்கினர் ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X