twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஸ்னேகா-ஜெயம் ரவிக்கு எடிசன் விருது!

    By Staff
    |

    Sneha and Jayam Ravi
    சிறந்த கலைஞர்களுக்காக ஆண்டு தோறும் வழங்கப்படும் எடிசன் விருது இம்முறை நடிகர் ஜெயம் ரவி, ஸ்னேகா, பிரசன்னா உள்ளிட்ட கலைஞர்களுக்கு வழங்கப்பட்டது.

    சென்னை லேடி ஆண்டாள் பள்ளி கலையரங்கில் நடந்த இந்த வண்ணமிகு விழாவில், சிறந்த தேச பக்திப் படத்துக்கான எடிசன் விருதை எஸ்.பி.ஜனநாதன் இயக்கிய 'பேராண்மை' திரைப்படம் பெற்றது.
    இந்தப் படத்தில் நாயகனாக நடித்த ஜெயம் ரவிக்கு சிறந்த தேசபக்தி நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. ஸ்னேகா வழங்க அந்த விருதை ஜெயம் ரவி பெற்றுக் கொண்டார்.

    'அச்சமுண்டு அச்சமுண்டு' படத்துக்காக சிறந்த நடிகை விருதினை ஸ்னேகா பெற்றுக் கொண்டார். இந்தப் படத்தின் நாயகன் பிரசன்னாவுக்கு சிறந்த நடிகருக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டது.

    சிறந்த இயக்குநருக்கான விருது அயன் படத்துக்காக இயக்குநர் கே.வி.ஆனந்துக்கு வழங்கப்பட்டது. சிறந்த நகைச்சுவை நடிகைக்கான விருதை ஆர்த்தி பெற்றுக் கொண்டார். வாழ்நாள் சாதனையாளர்கள் விருது நடிகை மனோரமாவுக்கும் இயக்குநர் பாலு மகேந்திராவுக்கும் வழங்கப்பட்டது.

    விழாவில் வழங்கப்பட்ட பிற விருதுகள்:

    சிறந்த நடிகர்- விக்ரம். சிறந்த நடிகை - தமன்னா. சிறந்த வில்லன் - தேவராஜ் (யோகி), குணச்சித்திர நடிப்பு - கிஷோர் மற்றும் அம்பிகா (வெண்ணிலா கபடி குழு மற்றும் மரியாதை). புதுமுக நடிகை - ஷம்மு. புதுமுக நடிகர் - ஜானி (ரேணிகுண்டா). சிறந்த ஒளிப்பதிவு - மனோஜ் பரமஹம்ஸா (ஈரம்). சிறந்த பாடகர் -கிரிஷ், சிறந்த பாடகி -சின்ன பொண்ணு, சிறந்த மக்கள் தொடர்பாளர் - டைமண் பாபு, சிறந்த பாடலாசிரியர்கள் - நா முத்துக்குமார், வி இளங்கோ (குளிர்), நெல்லை பாரதி (பட்டாளம்) மற்றும் பாலபாரதி (மதுர திமிரு).

    மை தமிழ் மூவீஸ் ஜெ செல்வகுமார் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். விழாவில் ஏராளமான நட்டத்திரங்கள், பார்வையாளர்கள் பங்கேற்றனர். கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சி 7 தொலைக்காட்சிகளில் விரைவில் ஒளிபரப்பாகிறது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X