twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சின்னத் திரை விருதுகள்: தேர்வு செய்ய குழு அமைப்பு

    By Chakra
    |

    Jaya TV
    சென்னை: சின்னத் திரை விருதுகளுக்கு தகுதியானவர்களைத் தேர்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் குழு அமைத்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

    இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

    சின்னத்திரை கலைஞர்களுக்கு விருது வழங்கும் திட்டம் 2006ம் ஆண்டு தி.மு.க.ஆட்சி அமைந்த பிறகு அறிமுகப்படுத்தப்பட்டு, ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட்ட வருகின்றன.

    இதைத்தொடர்ந்து, 2009-2010-ம் ஆண்டுகளுக்குரிய தமிழ்நாடு அரசு சின்னத்திரைக்கான சிறந்த தொடர்கள், நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர் விருதுகளுக்குத் தகுதியானவர்களைத் தேர்வு செய்திட,

    ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்தக்குழுவில், இயக்குநர் விடுதலை, எழுத்தாளர் அஜயன்பாலா, கதாசிரியர் கண்மணிசுப்பு,தயாரிப்பாளர் டி.வி.சங்கர், நடிகர், ஒளிப்பதிவாளர், இயக்குநர் ராஜசேகர், நடிகை நித்யா ரவீந்தர் ஆகியோரை அலுவல்சாரா உறுப்பினர்களாகவும்,

    தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறைச் செயலாளர், செய்தி-மக்கள் தொடர்புத்துறை இயக்குநர், செய்தி-மக்கள் தொடர்புத்துறை இணை இயக்குநர் (மக்கள் தொடர்பு), திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் ஆகியோரை அலுவல் சார்ந்த உறுப்பினர்களாகவும் கொண்ட தேர்வுக் குழுவை அமைத்து முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

    English summary
    TN CM has appointed a jury led by retired judge Shanmugam to select the TV artists for the Tamil TV awards.Karunanidhi had introduced this award wayback in 2006.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X