மீரா ஜாஸ்மினுக்கு ஸ்ரீவித்யா விருது!

தன் பெயரில் அறக்கட்டளை ஒன்றினை நிறுவி, ஆண்டு தோறும் சிறந்த கலைஞர்களுக்கு விருது வழங்கவேண்டும் என்பது சமீபத்தில் மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவின் விருப்பமாகும்.
அதன்படி இப்போது ஸ்ரீவித்யா அறக்கட்டளையைத் தொடங்கியுள்ளார் கேரளாவைச் சேர்ந்த எம்ல்ஏ கணேஷ் குமார்.
இந்த அறக்கட்டளை சார்பில், ஆண்டு தோறும் சிறந்த நடிகைக்கு விருதும், ரூ.10,001 ரொக்க பரிசும், இந்த ஆண்டு முதல் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த ஆண்டு நடிகை மீரா ஜாஸ்மின், இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த தகவலை அறக்கட்டளையின் தலைவர் கணேஷ் குமார் றிவித்தார். விரைவில் திருவனந்தபுரத்தில் நடைபெறும் விழாவில் இந்த விருது வழங்கப்படும்.
Comments


Click it and Unblock the Notifications