பி.சுசீலாவுக்கு எம்.ஜி.ஆர். விருது

By Staff

P.Susheela
தென்னகத்து இசைக் குயில் பி.சுசீலாவுக்கு, எம்.ஜி.ஆர். கழகத்தின் எம்.ஜி.ஆர். விருது வழங்கப்படுகிறது.

எம்.ஜி.ஆர். கழக நிறுவனத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு...

எம்.ஜி.ஆர். கழகம் சார்பில் ஆண்டுதோறும் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா சிறப்பா கொண்டாடப்படும். அதேபோல இந்த ஆண்டு எம்.ஜி.ஆரின் 93வது பிறந்த நாள் விழா மற்றும் சிறந்த கலைஞர்கள் இருவருக்கு விருது மற்றும் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி வருகிற 21ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது.

அண்ணா சாலை, ராணி சீதை ஹாலில் நடைபெறும் விழாவுக்கு நீதிபதி ஜெகதீசன் தலைமை தாங்குகிறார்.

மத்திய இணை அமைச்சர் ஜி.கே.வாசன் விருதுகளையும், பொற்கிழிகளையும் வழங்குகிறார்.

பின்னணிப் பாடகி பி.சுசீலா மற்றும் பிலிம் நியூஸ் ஆனந்தன் ஆகியோருக்கு விருது வழங்கப்படுகிறது.

கவிப்பேரரசு வைரமுத்து, ஜனநாயக முன்னேற்றக் கழகத் தலைவர் ஜெகத்ரட்சகன், முக்தா சீனிவாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குவார்கள்.

முன்னாள் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் அவ்வை நடராஜன் அறிமுக உரை நிகழ்த்துவார் என்று கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X