தேசிய விருது பெறுவதற்காக டெல்லி சென்றுள்ளார் இயக்குநர் பாலா.

இந்த விருதினை இன்று மாலை டெல்லியில் நடக்கும் விழாவில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் வழங்குகிறார். பாலாவுடன் அவரது மீடியா மேனேஜர் நிக்ல் முருகனும் சென்றுள்ளார்.
பாலாவுக்கு பெருமைக்குரிய தங்கத் தாமரை (ஸ்வர்ண கமல்) விருது இந்த விழாவில் வழங்கப்படுகிறது.
தமிழில் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டுள்ள வாரணம் ஆயிரம் படத்தின் விருதினைப் பெற அதன் இயக்குநர் கவுதம் மேனனும் டெல்லி சென்றுள்ளார்.
2009-ம் ஆண்டின் சிறந்த நடிகராக மராத்தியின் உபேந்திர லிமாயியும், சிறந்த நடிகையாக ப்ரியங்கா சோப்ராவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
Comments


Click it and Unblock the Notifications