சிறந்த ஒலிக்கலவை, ஒளிப்பதிவு, விஷூவல் எபெக்ட்... விருதுகளை அள்ளும் '1917'... இதுவரை 3 விருது

By

Recommended Video

List of all the winners at Oscars 2020 - Video

லாஸ் ஏஞ்சல்ஸ்: சிறந்த ஒளிப்பதிவு, விஷூவல் எபெக்ட், ஒலிக்கலவைக்கான ஆஸ்கர் விருதுகள் '1917' படத்துக்கு கிடைத்துள்ளது. இதுவரை இந்தப் படத்துக்கு 3 விருதுகள் கிடைத்துள்ளன.

92 வது ஆஸ்கர் விருது விழா இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விருது விழாவை உலகமே ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.

1917 wins best cinematogrphy, sound mixing, visual effects award in oscar 2020

ஹாலிவுட்டில் உருவான சினிமாக்களையும் திரை கலைஞர்களையும் கவுரவிக்கும் பொருட்டு, ஒவ்வொரு வருடமும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

ஹாலிவுட் சினிமாவின் உயரிய விருது விழாவான இதில், கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

உலக நாடுகளை சேர்ந்த திரை நட்சத்திரங்கள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் குவிந்துள்ளனர்.
விழா நடைபெறும் டால்பி திரையரங்கம் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த விழா கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தொகுப்பாளர் இல்லாமல் நடைபெறுகிறது.

இதில் சிறந்த துணை நடிகருக்கான விருது பிராட் பிட்டுக்கு கிடைத்தது. ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சிறந்த அனிமேஷன் படத்துக்கான விருது டாய் ஸ்டோரி 4 என்ற படத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் டாம் ஹாங்க்ஸ், டிம் ஆலன், டோனி ஹேல் உட்பட பலர் நடித்துள்ள காமெடி படம் இது.

சிறந்த ஒரிஜினல் திரைக்கதைக்கான விருது, பாரசைட் படத்துக்கு கிடைத்துள்ளது. இந்த படத்துக்கு திரைக்கதை எழுதிய போங்க் ஜூன் -ஹோ மற்றும் ஹான் ஜி-வோன் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்தப் படத்துக்கு ஏற்கனவே சிறந்த வெளிநாட்டுப் படத்துக்கான கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது 1917 படத்துக்கு கிடைத்துள்ளது. இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த ரோஜர் டீக்கின்ஸ் இந்த விருதை பெற்றார். ஏற்கனவே சிறந்த ஒலிக்கலவைக்கான விருதும் இந்தப் படத்துக்கு கிடைத்துள்ளது. இந்நிலையில், சிறந்த விஷூவல் எபெக்ட்டுக்கான விருதும் இந்தப் படத்துக்கு கிடைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X