twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    19வது சென்னை சர்வதேச திரைப்பட விழா... சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு விருது

    |

    சென்னை : சென்னையில் கடந்த 30ம் தேதி துவங்கிய 19வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்றைய தினம் நிறைவடைந்துள்ளது.

    இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில் கடந்த 2003 முதல் இந்த விழா நடத்தப்பட்டு வருகிறது.

    இதில் சர்வதேச மற்றும் இந்திய அளவில் சிறப்பான படங்கள் திரையிடப்பட்டு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    காதலை விட மரியாதை முக்கியமானது… சுஷ்மிதா சென் சொன்ன லவ் மெசேஜ்!காதலை விட மரியாதை முக்கியமானது… சுஷ்மிதா சென் சொன்ன லவ் மெசேஜ்!

    சென்னை சர்வதேச திரைப்பட விழா

    சென்னை சர்வதேச திரைப்பட விழா

    இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில் கடந்த 2003 முதல் சென்னை சர்வதேச திரைப்பட விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சர்வதேச மற்றும் இந்திய அளவில் சிறப்பான படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு திரையிடப்பட்டு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    100 படங்கள் திரையிடப்பட்டன

    100 படங்கள் திரையிடப்பட்டன

    இந்நிலையில் சென்னையில் 19வது சென்னை சர்வதேச திரைப்பட விழா கடந்த கடந்த 30ம் தேதி துவங்கி நடைபெற்றது. இதில் 53 நாடுகளில் இருந்து 100 திரைப்படங்கள் திரையிடப்பட்டன. நேற்றுடன் நிறைவு பெற்ற இந்த விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

    தமிழ் பிரிவில் திரையிடப்பட்ட 11 படங்கள்

    தமிழ் பிரிவில் திரையிடப்பட்ட 11 படங்கள்

    இதில் தமிழ் பிரிவில் உடன்பிறப்பே, கர்ணன், தேன், கட்டில், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், ராமே ஆண்டாலும் ராவனே ஆண்டாலும், ஐந்து உணர்வுகள், மாறா, பூமிகா, சேத்துமான், கயமை கடக்க ஆகிய 11 படங்கள் போட்டியில் பங்கேற்றன.

    சிறந்த திரைப்படத்திற்கான விருது

    சிறந்த திரைப்படத்திற்கான விருது

    இதில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை இயக்குநர் வசந்த் எஸ் சாயின் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படம் பெற்றுள்ளது. இதற்கான காசோலை இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு தலா 2 மற்றும் ஒரு லட்சம் ரூபாயாக பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

    சிங்கிதம் சீனிவாசராவுக்கு விருது

    சிங்கிதம் சீனிவாசராவுக்கு விருது

    இதேபோல இரண்டாம் பரிசாக தேன், சேத்துமான் ஆகிய படங்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தப் படங்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்பட்டது. இதுதவித வாழ்நாள் சாதனையாளர் விருது மூத்த இயக்குநர் சிங்கிதம் சீனிவாசராவுக்கும் அமிதாப்பச்சன் யூத் ஐகான் விருது பாடகர் சித் ஸ்ரீராமுக்கும் வழங்கப்பட்டது.

    லட்சுமி பிரியாவிற்கு விருது

    லட்சுமி பிரியாவிற்கு விருது

    மேலும் சிறந்த நடுவர் விருது சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்தில் நடித்த லட்சுமி பிரியாவிற்கும் வழங்கப்பட்டது. இவர்கள் மூவருக்கும் தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் இந்தோ சினி அப்ரிசியேஷன் பொதுச் செயலாளர் தங்கராஜ், இணை இயக்குநர் முரளி, விழா நடுவர்களான இயக்குநர்கள் வசந்தபாலன், எஸ்எஸ் ஸ்டான்லி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    English summary
    19th Chennai International film festival -Sivaranjaniyum innum sila pengalum got award
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X