சென்னையில் சர்வதேச திரைப்பட விழா.... எங்கே, எப்போ துவங்குது தெரியுமா ?

சென்னை : ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழாக்கள் உலகம் முழுவதும் நடைபெறுவது வழக்கம். ஆனால் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேச திரைப்பட விழாக்கள் ஏதும் நடத்தப்படாமல் இருந்தன.

கடந்த சில மாதங்களாக சர்வதேச திரைப்பட விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வெளிநாடுகளைத் தொடர்ந்து, தற்போது இந்தியாவிலும் சர்வதேச திரைப்பட விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட்டது.

19th Chennai International Film festival will begins on dec 30th

இந்நிலையில் கோவாவை தொடர்ந்து சென்னையிலும் சர்வதேச திரைப்பட விழா நடத்தப்பட உள்ளது. 19 வது சர்வதேச திரைப்பட விழா வரும் டிசம்பர் 30 ம் தேதி துவங்கி, 2022 ம் ஆண்டு ஜனவரி 6 ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. காலை 9.30 மணி துவங்கி, இரவு 9.30 மணி வரை இந்த விழா நடைபெற உள்ளது.

சென்னையில் புகழ்பெற்ற சத்யம் சினிமாஸ் - பிவிஆர் லிமிடெட் மற்றும் எஸ்டிசி அண்ணா சினிமாஸ் ஆகிய இடங்களில் இந்த திரைப்பட விழாவினை நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்கான முன்பதிவுகளும் நடைபெற்று வருகின்றன.

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் யாரெல்லாம் பங்கேற்க போகிறார்கள், எந்தெந்த படங்கள் திரையிடப்பட உள்ளன, அதிலும் தமிழில் எந்தெந்த படங்கள் திரையிடப்பட உள்ளன, யாரெல்லாம் விருது பெற போகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக காத்திருக்கிறார்கள்.

சென்னை சர்வதேச திரைப்பட விழா 2003 ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இதில் சர்வதேச மற்றும் இந்தியாவின் சிறந்த படங்கள் திரையிடப்பட்டும், அவற்றிற்கு விருதுகள் வழங்கப்பட்டும் வருகிறது. உலகின் தலைசிறந்த தமிழ் சினிமாக்கள் இந்த விழாவில் திரையிடப்பட்டு வருகின்றன.

60 நாடுகளை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட சினிமாக்கள் இந்த விழாவில் திரையிடப்பட உள்ளன. தமிழில் சிறந்த படம், இரண்டாவதாக சிறந்த படம், ஸ்பெஷல் ஜுரி விருது, Online film buff விருது, Amitabh Bacchan youth icon விருது என மொத்தம் ஐந்து விருதுகள் இந்த விழாவில் வழங்கப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X