twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாலாவுக்கு தேசிய விருது-பிரதீபா வழங்கினார்

    By Staff
    |

    Bala Gets National Award for Naan Kadavul
    56வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா டெல்லியில் உள்ள விஞ்ஞான பவனில் நேற்று நடந்தது. ஜனாதிபதி பிரதீபா பட்டீல் விருதுகளை வழங்கினார்.

    நான் கடவுள் படத்தை இயக்கிய டைரக்டர் பாலாவுக்கு சிறந்த இயக்குனருக்கான விருது வழங்கப்பட்டது.

    இந்திய சினிமா உலகின் மூத்த கலைஞரும், சிறந்த ஒளிப்பதிவாளருமான வி.கே.மூர்த்திக்கு, நாட்டின் மிக உயர்ந்த திரைப்பட விருதான தாதா சாகேப் பால்கே' விருது வழங்கப்பட்டது.

    87 வயதான இவர்தான் இந்தியாவின் முதல் சினிமாஸ்கோப் படமான காகஸ் கி பூல் இந்திப் படத்தின் கேமராமேன் ஆவார்.

    நிகழ்ச்சியில் ஜோக்வா என்ற மராத்தி மொழிப் படத்தில் நடித்த உபேந்திராவுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.

    பேஷன் என்ற இந்திப் படத்தில் நடித்த பிரியங்கா சோப்ராவுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.
    இதே படத்தில் நடித்த கங்கனா ரனாவத்துக்கு சிறந்த துணை நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.

    சாம்ஸ் பட்டேல் (தேங்க்ஸ் மா) சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான விருது பெற்றார்.

    ஜோக்வா படத்தில் பாடிய ஹரிஹரன், சிறந்த பாடகருக்கான விருதை பெற்றார்.

    சிறந்த பிராந்திய மொழி படங்களில் தமிழில் வாரணம் ஆயிரம் படம் தேர்வு செய்யப்பட்டது. இதற்கான விருதை இயக்குனர் கெளதம் மேனன் பெற்றார்.

    விழாவில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அம்பிகா சோனி, இணையமைச்சர் ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X