Oscar Awards 2024: '20 Days In Mariupol' சிறந்த ஆவணப்படம்.. ஆஸ்கர் மேடையில் ஒலித்த போர் குரல்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில், 96வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடந்து வருகிறது. இதில் உக்ரைன் நாட்டின் 20 Days In Mariupol எனும் ஆவணப்படத்துக்கு விருது வழங்கப்பட்டது. அந்த விருதை பெற்ற அதன் இயக்குநர் Mstyslav Chernov ரஷ்யாவின் போர் பற்றியும் அதன் பாதிப்புகள் குறித்தும் உருக்கமாக பேசியது உலகை உலுக்கியுள்ளது.
1927ஆம் ஆண்டில், அகாடமி ஆஃப் மோஷன் பிச்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ், அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர்கள் குழுவால் நிறுவப்பட்டது. 1928ஆம் ஆண்டில், அந்தக் குழு தனது அகாடமி விருதுகள் முதன்முறையாக வழங்கப்பட்டது. இன்று அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்து இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள், எழுத்தாளர்கள், பாடலாசிரியர்கள், இசைக் கலைஞர்கள் 9ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அகாடமியில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். சிறந்த படைப்பை கொடுத்து ஆஸ்கர் விருதை பெற வேண்டும் என்பது படைப்பாளிகளின் கனவாக இருக்கிறது.

96வது ஆஸ்கர் விருது: இந்நிலையில், 96வது ஆஸ்கர் விருது நிகழ்ச்சி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் இந்திய நேரப்படி காலை 5 மணிக்கு துவங்கியது. ஆஸ்கர் விருது விழாவிற்கு வருகை தந்த பிரபலங்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டு விருது வழங்கும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
ஜிம்மி கிம்மல்: ஆஸ்கர் விருது விழாவை ஜிம்மி கிம்மல் 4வது முறையாக தொகுத்து வழங்கினார். அப்போது பேசிய அவர், பார்பி படத்தில் வருவது போல, சாப்பிட்டும், ராபர்ட் டவுனி ஜூனியரின் கதாபாத்திரத்தை கேலி செய்து பார்வையாளர்களை சிரிக்கவைக்க முயற்சி செய்தார். ஆனால், ஜிம்மி கிம்மல் செய்தது ரசிக்கும் படி இல்லை என்பதை, அங்கிருந்த யாரும் சிரிக்காத போதே தெரிந்துவிட்டது. இதையடுத்து, பார்பி படத்தில் வரும் காட்சியுடன் ஆஸ்கர் விருது விழா ஆரம்பம் ஆனது.
20 Days In Mariupol: இதில், உக்ரைன் நாட்டின் 20 Days In Mariupol எனும் ஆவணப்படத்துக்கு விருது வழங்கப்பட்டது. விருதை பெற்றுக்கொண்ட இயக்குனர் எம்ஸ்டிஸ்லாவ் செர்னோவ், இது உக்ரைனுக்கு கிடைத்த முதல் ஆஸ்கார் விருது இதை சொல்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதே நேரத்தில், 20 Days In Mariupol இப்படத்தை ஆவணப்படமாக எடுக்க விருப்பம் இல்லை என்றார்.
மேடையில் ஒலித்த இந்த போர் குரல்: தொடர்ந்து பேசிய செர்னோவ், ரஷ்யா ஒருபோதும் உக்ரைனைத் தாக்காததற்கும், எங்கள் நகரங்களை ஆக்கிரமிக்காததற்கும் இதைப் பரிமாறிக் கொள்ள விரும்புகிறேன், பல்லாயிரக்கணக்கான எனது சக உக்ரேனியர்களைக் கொல்லாத ரஷ்யாவுக்காக அங்கீகாரத்தை நான் விட்டுவிடுவேன். பணயக் கைதிகள், நிலங்களைப் பாதுகாக்கும் ராணுவ வீரர்கள், சிறையில் உள்ள பொதுமக்கள் அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஆனால் என்னால் வரலாற்றை மாற்ற முடியாது, ஆனால், கடந்த காலத்தை என்னால் மாற்ற முடியாது என்று பேசினார். ஆஸ்கர் மேடையில் ஒலித்த இந்த போர் குரல் அரங்கில் இருந்தவர்களை சற்று நேரம் உணர்ச்சிப்படவைத்தது.


Click it and Unblock the Notifications











