twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழக அரசின் விருதுகளை பெற்ற சிறந்த சீரியல்கள்..உங்கள் ஃபேவரைட் இந்த லிஸ்டில் இருக்கிறதா?

    |

    சென்னை : தமிழக அரசு திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகளை அறிவித்துள்ளது.

    இதில், 2009 முதல் 2013 ஆம் ஆண்டுகள் வரை தேர்வு செய்யப்பட்டுள்ள நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 இலட்சம் வழங்கப்பட உள்ளது.

    இதில் மாண்புமிகு அமைச்சர்கள் பங்கேற்று விருதாளர்களுக்கு தங்கப்பதக்கம், சிறந்த திரைப்படங்கள் மற்றும் நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கு காசோலை, நினைவுப்பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளது.

     சியான் விக்ரமுக்கு என்னாச்சு..கதாபாத்திரங்கள் தேர்வில் குழப்பம்? சியான் விக்ரமுக்கு என்னாச்சு..கதாபாத்திரங்கள் தேர்வில் குழப்பம்?

    2009ம் ஆண்டின் சிறந்த நெடுந்தொடர்

    2009ம் ஆண்டின் சிறந்த நெடுந்தொடர்

    2009ம் ஆண்டின் சிறந்த தொடராக திருமதி செல்வம் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசையும் இரண்டாவதாக வசந்தம் தொடரும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டின் சிறந்த சாதனையார் டெல்லி கணேஷ், சிறந்த நடிகராக ஜி ஸ்ரீகுமார், சிறந்த நடிகையாக சங்கீதா தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    சிறந்த தொடர்

    சிறந்த தொடர்

    2010ம் ஆண்டின் சிறந்த தொடருக்கான முதல் பரிசை உறவுக்கு கை கொடுப்போம் தொடரும், இரண்டாம் பரிசு தென்றதல் சீரியலுக்கும் வழங்கப்பட உள்ளது. மேலும், இந்த ஆண்டின் சிறந்த சாதனையாளராக சுபலோக சுதாகரும், சிறந்த நடிகர் தீபக், சிறந்த நடிகை ஸ்ருதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    சிறந்த இயக்குநர் கே பாலச்சந்தர்

    சிறந்த இயக்குநர் கே பாலச்சந்தர்

    2011 சிறந்த தொடராக சாந்தி நிலையமும், நாதஸ்வரம் நெடுந்தொடரும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த கதாநாயகனாக சீனு ரங்கசாமியும், சிறந்த கதாநாயகியாக சந்தோஷி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும சாந்திநிலையம் தொடரை இயக்கிய மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தர் சிறந்த இயக்குநராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

    சிறந்த தொடர்

    சிறந்த தொடர்

    2012ம் ஆண்டின் சிறந்த தொடராக இருமலர்கள் மற்றும் உதிரிப்பூக்கள் ஆகிய தொடர்கள் முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளன. சிறந்த நடிகராக இளவரசி தொடரில் நடித்த ஸ்ரீகர் பிரசாத்துடம், சிறந்த நடிகையாக உறவுகள் சீரியலில் நடித்த ஸ்ரீதுர்காவும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

    சாதனையாளராக குட்டி பத்மினி

    சாதனையாளராக குட்டி பத்மினி

    2013ம் ஆண்டின் சிறந்த சீரியலாக வாணி ராணி தொடர் முதல் இடத்தையும், தெய்வமகள் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது. 2013ம் ஆண்டின் சாதனையாளராக குட்டி பத்மினியும், வாழ்நாள் சாதனையாளராக வியட்நாம் வீடு சுந்தரமும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    விருது வழங்கும் விழா

    விருது வழங்கும் விழா

    சின்னத்திரை விருதுகள் 2009 ஆண்டு முதல் 2013 ஆண்டுகள் வரை சிறந்த நெடுந்தொடர்களின் தயாரிப்பாளர்களுக்கு முதல் பரிசு ரூ.2 இலட்சம், இரண்டாம் பரிசு ரூ.1 இலட்சம் மற்றும் ஆண்டின் சிறந்த வாழ்நாள் சாதனையாளர்களுக்குத் தலா ரூ. 1 இலட்சம் என 20 பேருக்கு ரூ. 25 இலட்சத்திற்கான காசோலையும் சிறந்த கதாநாயகன், கதாநாயகி மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் என 81 பேருக்கு 3 பவுன் தங்கப்பதக்கம் வழங்கப்படுகிறது. இந்த விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற உள்ளது.

    English summary
    2009 to 2013 full list best serial and actor actress complete list,Thirumathi selvam, Iru malargal, Vani Rani,Santhi nilayam serial.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X