ஜோதிர்மயி நடித்த படத்துக்கு விருது!

போன நூற்றாண்டுப் பெண் மாதிரியே வாழ்ந்து காட்டியிருக்கிறாராம் ஜோதிர்மயி இந்தப் படத்தில்.
இந்தப் படம் சமீபத்தில் திருவனந்தபுரம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. படத்தைப் பார்த்த வெளிநாட்டு ஜூரிக்களும் பெரிதும் பாராட்டிய இந்தப் படத்துக்கு, நெட் பேக் எனும் ஆசிய விருது கிடைத்துள்ளது.
1940களில் வாழ்ந்த ஒரு எழுத்தாளரின் உண்மைக் கதையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட அந்தக் கதையில், எழுத்தாளரின் காதலியாக வாழ்ந்துள்ளாராம் ஜோதிர்மயி.
இதுகுறித்து ஜோதிர்மயி கூறும்போது, இந்த படத்துக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்த ஒன்றுதான். 75 ஆண்டுக்கு முன் ஒரு மலையாளப் பெண் எப்படி இருந்திருப்பாள் என்பதை உணர்ந்து நடித்த படம்.
இந்த படத்தில் நான் மட்டும்தான் பழைய முகம். ஹீரோ உட்பட அனைவரும் புதுமுகம். என் நம்பிக்கை வீண்போகவில்லை என்றார்.
மலையாளத்தில் ஜோதிர்மயிக்கு நல்ல அடையாளம் கிடைத்து விட்டது. தமிழில்தான் ...!


Click it and Unblock the Notifications











