தர்மேந்திராவுக்கு பால்கே ரத்னா விருது!!

மும்பையில் மே 3-ம் தேதி நடக்கும் பிரமாண்ட விழாவில் இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.
எழுபது மற்றும் எண்பதுகளில் இந்திய திரையுலகின் மிகப் பெரிய சூப்பர் ஸ்டாராகத் திகழ்ந்தவர் தர்மேந்திரா. ஷோலே உள்ளிட்ட மிகப்பெரிய வெற்றிப் படங்களில் நடித்தவர். இப்போதும் நடித்து வருகிறார். இவரது மனைவி ஹேமமாலினியும் திரையுலகில் பெரும் சாதனையாளராகத் திகழ்கிறார்.
தர்மேந்திராவின் திரையுலக சாதனைகளை கவுரவிக்கும் வகையில் அவருக்கு பால்கே ரத்னா விருது வழங்கப்படுகிறது.
இத்தகவலை தாதா சாகேப் பால்கே விருது அகாடமியின் இயக்குநர் அசோக் சேகர் தெரிவித்தார்.
இந்த விழாவில் முன்னாள் நடிகை ஆஷா பரேக்குக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
பாலிவுட் நடிகைகள் ராணி முகர்ஜி, பிரியங்கா சோப்ரா, அனுஷ்கா சர்மா மற்றும் ரன்வீர் கபூர் போன்றவர்களுக்கும் பல்வேறு பிரிவுகளில் பால்கே அகாடமி விருதுகளை வழங்கவிருக்கிறது.


Click it and Unblock the Notifications











