வங்காள இயக்குநருக்கு பால்கே விருது
பிரபல வங்காள மொழி திரைப்பட இயக்குனர் தபன் சின்ஹா, 2006ம் ஆண்டுக்கான 'தாதாசாகேப் பால்கே' விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு தங்கத் தாமரை மற்றும் ரூ.10 லட்சம் ரொக்க பரிசு ஆகியவற்றை ஜனாதிபதி பிரதீபா பட்டீல் வழங்குவார். விருது வழங்கப்படும் தேதி குறித்து அறிவிப்பு பின்னர் அறிவிக்கப்படும்.
தற்போது 84 வயதாகும் தபன் சின்கா, 19 தேசிய விருதுகளை பெற்றுள்ளார். இந்தியாவின் 60-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சமீபத்தில் அவருக்கு 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்பட்டது.
1946ம் ஆண்டில் கொல்கத்தாவில் உள்ள ஒரு தியேட்டரில் சவுண்ட் என்ஜினீயராக சினிமா வாழ்க்கையை தொடங்கிய அவர், காபுலிவாலா, அதிதி உட்பட பல பிரபல திரைப்படங்களை இயக்கி இருக்கிறார்.
வங்காளி தவிர, இந்தி மற்றும் ஒரியா மொழி படங்களையும் இயக்கி உள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications