twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஹ்மானுக்கு சிஎன்என்-ஐபிஎன் சிறந்த இந்தியர் விருது - கமலுக்கு சிறப்பு விருது

    By Staff
    |

    Rahman wins CNN-IBN Indian of the Year award
    டெல்லி: இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இந்த ஆண்டின் சிஎன்என்-ஐபிஎன் சிறந்த இந்தியர் விருது நேற்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டது. பிரதமர் மன்மோகன் சிங் விருதினை வழங்கினார்.

    விருதினைப் பெற்றுக் கொண்ட ரஹ்மான் பேசுகையில், இதை இசைக்கு கிடைத்த வெற்ரி. இது ஏராளமானோரை ஈர்த்து அவர்களுக்கு ஊக்கம் தரும் என்று நம்புகிறேன் என்றார்.

    பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், ரஹ்மானின் இசை அனைவரையும் கவரக் கூடியதாக உள்ளது. வெள்ளை மாளிகையில் அவரது இசையைக் கேட்டபோது எனக்கு மகிழ்ச்சியும், உற்சாகமும் வந்தது. ஏதோ சாதனை செய்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.

    அனைத்து உலகினரையும் கவரக் கூடியது ரஹ்மானின் இசை என்றார்.

    இந்த விருது தவிர இசைத் துறையில் சிஎன்என் ஐபிஎன் இந்தியர் விருதையும் ரஹ்மான் வென்றார்.

    இந்த ஆண்டின் அரசியல்வாதி விருது ராகுல் காந்திக்குச் சென்றது.

    இளம் சாதனையாளர் விருது சாய்னா நெஹ்வாலுக்கும், சிறந்த இந்தியத் தொழிலதிபர் விருது கிரண் கார்னிக், அச்சுதன் ஆகியோருக்கும், சிறந்த நடுவர் விருது தீபக் பரேக்குக்கும் கிடைத்தது.

    கலைஞானி கமல்ஹாசனுக்கு திரையுலகில் பொன்விழா கண்டதற்காக சிறப்பு விருது கொடுக்கப்பட்டது.

    அதேபோல டெஸ்ட் போட்டிகளில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்துள்ள இந்திய கிரிக்கெட் அணிக்கு சிறப்பு விருது அளிக்கப்பட்டது. இதை கங்குலி, கும்ப்ளே, ராகுல் டிராவிட், லட்சுமண், முரளி கார்த்திக் ஆகியோர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.

    வாழ்நாள் சாதனையாளர் விருது ரவிசங்கருக்கு கொடுக்கப்பட்டது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X