ரஜினி, கமலுக்கு விருது?

தமிழக அரசு ஆண்டு தோறும் சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கு விருது வழங்கிக் கெளரவித்து வருகிறது. 2007-08ம் ஆண்டுக்கான விருதுப் பட்டியல் தயாராகி விட்டதாம்.
அதன்படி, 2007ம் ஆண்டுக்கான சிறந்த நடிகராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் (சிவாஜி), 2008ம் ஆண்டுக்கான சிறந்த நடிகராக கமல்ஹாசனும் (தசாவதாரம்) தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்த முறையான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் எனத் தெரிகிறது.
விரைவில் சென்னையில் நடைபெறும் நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி விருதுகளை வழங்குவார்.
கடந்த 2005ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது சந்திரமுகி படத்துக்காக ரஜினிக்கும், 2006ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது வேட்டையாடு விளையாடுக்காக கமல்ஹாசனுக்கும் வழங்கப்பட்டது நினைவிருக்கலாம். இந்த இரு ஆண்டுகளுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி 2007ம் ஆண்டு நடத்தப்பட்டது.
விரைவில் ரஜினிகாந்த் தனது 60வது பிறந்த நாளை கொண்டாடவுள்ளார். அதேபோல கமல்ஹாசன் தனது கலையுலக வாழ்க்கையின் 50வது வருடத்தில் நிற்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











