CIFF: சென்னை திரைப்பட விழாவில் விருதுகளைக் குவித்த படங்கள்.. மொத்த லிஸ்ட் இதோ!
சென்னை: இந்தியாவில் சில மாநிலங்களில்தான் சர்வதேச திரைப்படத் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றது. இதில் உலகப் புகழ்பெற்ற திரைப்படத் திருவிழா என்றால் அது கோவா திரைப்படத் திருவிழாதான். அதேபோல் சென்னையில் நடைபெறும், திரைப்படத் திருவிழா கடந்த 21 ஆண்டுகளாக வெகு சிறப்பாக நடைபெற்றுள்ள நிலையில், இந்த ஆண்டு 22வது சென்னை சர்வதேசத் திரைப்படத் திருவிழா நடைபெற்று முடிந்துள்ளது. இதில் சர்வதேச திரைப்படங்களுடன், இந்தியப் படங்களும் திரையிடப்பட்டது. இதில் சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர், படம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் வழங்கப்பட்டது.
22வது சென்னை சர்வதேச திரைப்படத் திருவிழா, கடந்த 12ஆம் தேதியில் இருந்து, 19ஆம் தேதி வரை மிகவும் கோலாகளமாக நடைபெற்றது. தமிழ்நாடு அரசு வழங்கும் நிதியுடன், நடைபெறும் இந்த திரைப்படத் திருவிழாவை, இந்திய திரைப்படத் திறனாய்வுக் கழகம் நடத்துகின்றது. சென்னையில் உள்ள பிரபலமான திரையரங்குகளில் இந்த விழா நடைபெற்றது. குறிப்பாக, சென்னை சத்யம் தியேட்டர், மைலாப்பூர் மற்றும் ராயப்பேட்டையில் உள்ள பி.வி.ஆர்.,ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்யன் ஹவுஸ் ஆகிய இடங்களில் படங்கள் திரையிடப்பட்டது. மொத்தம் 180 படங்கள் திரையிடப்பட்டது.

விருதுகள் பட்டியல்:
முதல் சிறந்த படம் - அமரன் (விருதுடன் ரூபாய் ஒரு லட்சம் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமிக்கும் தயாரிப்பாளர் மகேந்திரனுக்கும் வழ்ங்கப்பட்டது)
இரண்டாவது சிறந்த படம் - லப்பர் பந்து, இயக்குந தமிழரசன் பச்சமுத்து மற்றும் தயாரிப்பாளர் லக்ஷ்மணன் என இருவருக்கும் விருதுடன் ரூபாய் 50 ஆயிரம் வழங்கப்பட்டது.

சமூக பிரச்னையைப் பேசிய சிறந்த படம் - இரா. சரவணன் இயக்கிய நந்தன்
சிறந்த இயக்குநர் சிறப்பு விருது - பா. ரஞ்சித் ( தங்கலான்)
சிறந்த நடிகர் ஆண் - விஜய் சேதுபதி (மஹாராஜா)
சிறந்த நடிகர் பெண் - சாய் பல்லவி (அமரன்)
சிறந்த துணை நடிகர் ஆண் - தினேஷ் (லப்பர் பந்து)
சிறந்த துணை நடிகை - துஷாரா விஜயன் (வேட்டையன்)
சிறந்த கதாசிரியர் - நித்திலன் சாமிநாதன் (மஹாராஜா)
சிறந்த இயக்குநர் - ராஜ்குமார் பெரியசாமி (அமரன்)

சிறந்த ஒளிப்பதிவாளர் - சாய் (அமரன்)
சிறந்த எடிட்டர் - பிலோமின் ராஜ் (மஹாராஜா)
சிறந்த ஒலிப்பதிவு - சுரேன் அழகிய கூத்தன் (கொட்டுக்காளி)
சிறந்த குழந்தை நட்சத்திரம் - பொன்வேல் ( வாழை)
சிறந்த இசை - ஜி.வி. பிரகாஷ்குமார் ( அமரன்)
சிறந்த கலை இயக்குநர் - மூர்த்தி ( தங்கலான்)
மக்கள் விரும்பும் நடிகர் ஆண் - அரவிந்த்சாமி ( மெய்யழகன்)
மக்கள் விரும்பும் நடிகர் பெண் - அன்னா பென் ( கொட்டுக்காளி)
அமிதாப்பச்சன் யூத் ஐகான் விருது - அருள்நிதி (டிமான்டி காலனி 2)
சிறந்த பொழுதுபோக்குப் படம் - வேட்டையன்
சிறந்த குறும்படம் - கயமை
மேற்கண்ட பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டது. இது திரைத்துறையினரையும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications











