ரகுமானுக்கு வாழ்நாள் சாதனை விருது

இந்த விருது அறிவிப்பை ஐஐபிஏ நிறுவனம் நேற்று அறிவித்தது. வரும் ஜூன் 6ம் தேதி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் அதிவிமரிசையாக நடக்கும் விழாவில் ரஹ்மானுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது.
இசையுலகுக்கு ரஹ்மானின் பங்களிப்புக்காகவும், இந்திய இசையை உலகம் முழுவதும் மிகக்குறுகிய காலத்திலேயே பிரபலப்படுத்தியதற்காகவும் இந்த சாதனை விருதை அளிப்பதாக ஐஐபிஏ குறிப்பிட்டுள்ளது.
அகாதமி அமைப்பாளர்களில் ஒருவரான பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சனிடம் இருந்த இந்த விருதை ரஹ்மானுக்கு பெறவுள்ளார். ஷாரூக் கான், ஐஸ்வர்யா பச்சன் ஆகியோர் இந்த விழாவில் அழைக்கப்பட்டுள்ள முக்கிய விருந்தினர்கள் ஆவர்.
Comments


Click it and Unblock the Notifications