twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    த்ரிஷாவுக்கு 'மா' டிவி விருது!

    By Staff
    |

    Trisha
    நடிகை த்ரிஷாவுக்கு சிறந்த நடிகைக்கான 'மா' டிவி விருது கிடைத்துள்ளது. 'ஆடவாரி மாட்லேகு அந்தரு வேருலே' என்ற தெலுங்குப் படத்தில் சிறப்பாக நடித்தற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

    தெலுங்கு-தமிழில் முண்ணனி நடிகையாக உள்ள த்ரிஷா கடந்த ஆண்டு செல்வராகவன் இயக்கத்தில் வெங்கடேஷுக்கு ஜோடியாக நடித்த படம் ஆடவாரி... இதில் த்ரிஷா மிகச் சிறப்பாக நடித்ததற்காக தெலுங்கின் முன்னணி தொலைக்காட்சியான மா டிவி இந்த விருதினை வழங்கியுள்ளது.

    செல்வராகவன் இயக்கிய படம்தான் இந்த ஆடவாரி. இதைத்தான் இப்போது செல்வராகவன் தமிழில் யாரடி நீ மோகினி என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார்.

    தமிழில் திரிஷா நடித்த கேரக்டரில் நயனதாரா நடித்துள்ளார். தம்பி தனுஷ்தான் நாயகன். விரைவில் திரைக்கு வரவுள்ள மோகினியும், விருதை அள்ளட்டும்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X