twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அங்காடித் தெருவுக்கு மேலும் ஒரு விருது!

    By Chakra
    |

    வசந்த பாலன் இயக்கத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற அங்காடித் தெரு படத்துக்கு சென்னை திரைப்பட விழாவில் சிறந்த படத்துக்கான விருது வழங்கப்பட்டது.

    அய்ங்கரன் தயாரிப்பாக வந்து, சர்வதேச அளவில் பல விருதுகளையும் பாராட்டுக்களையும் குவித்துள்ள படம் அங்காடித் தெரு. பெரும் வர்த்தக நிறுவனங்களின் இன்னொரு இருட்டுப் பக்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிய படம்.

    வணிக ரீதியிலும் பெரும் வெற்றி பெற்றது. சமீபத்தில் கோவா திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பையும் பாராட்டுக்களையும் பெற்றது.

    இப்போது, சென்னை சர்வதேச திரைப்பட விழாவிலும் அங்காடித் தெரு திரையிடப்பட்டது. திரைப்பட விழாவின் இறுதி நாளான நேற்று, அதில் பங்கேற்ற படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன.

    தமிழில் சிறந்த படமாக அங்காடித் தெரு அறிவிக்கப்பட்டது. படத்தின் இயக்குநர் வசந்த பாலன், தயாரிப்பாளர்கள் அருண்பாண்டியன் மற்றும் விஜயகுமாரிடம் அதற்கான விருதினை வழங்கிப் பாராட்டினார்கள் இயக்குநர்கள் பாலுமகேந்திரா மற்றும் கே பாக்யராஜ்.

    சற்குணம் இயக்கிய களவாணி படத்துக்கு இரண்டாவது சிறந்த படத்துக்கான விருதினை வழங்கப்பட்டது.

    ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்ததற்காக பார்த்திபனுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

    மைனா படத்துக்காக பிரபு சாலமனுக்கு சிறந்த இயக்குநர் விருது வழங்கப்பட்டது.

    English summary
    Vasantha Balan"s critically aclaimed super hit movie Angadi Theru adjudged as best film in 8th Chennai film festival. The Jury Award is given to Mr.R.Parthiban by Ms.Aparnasen for his performance in Ayirathil Oruvan. The Script Writer Award is given to Mr.Prabhu Solomon for his film Myna by Mr.K.Bhagyaraj. The 2nd Best Film Award is given to Mr.Sargunam and Producer Mr.Nazir for the film Kalavaani by Mr.Balumahendra.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X