ஜெயசித்ரா-ஸ்ரீகாந்த்க்கு கண்ணதாசன் விருது

கவியரசு கண்ணதாசனின் 82-வது பிறந்தநாள் மற்றும் கண்ணதாசன் விருது வழங்கும் விழா சென்னை தியாகராயநகர் வாணிமஹாலில் நடைபெற்றது. பம்பல் கவியரசு கண்ணதாசன் தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த விழாவிற்கு ஜனநாயக முன்னேற்றக்கழக தலைவர் எஸ்.ஜெகத்ரட்சகன் தலைமை தாங்கினார்.
திரைப்பட இசையமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி, பின்னணி பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்த ஆண்டிற்கான கண்ணதாசன் விருதுக்கு பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த், நடிகை ஜெயசித்ரா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தனர்.
அவர்களுக்கு விருதுகளை இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் வழங்கினார். தமிழ்நாடு திட்டக்குழு உறுப்பினர் தமிழருவி மணியன், மெகா டி.வி.ஆதவன் ஆகியோர் கண்ணதாசனை பற்றி விரிவாக பேசினர்.
முன்னதாக கவியரசு கண்ணதாசனின் உருவப்படத்தை ஜனநாயக முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் எஸ்.ஜெகத்ரட்சகன் திறந்து வைத்து பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், கவிஞர் கண்மணிசுப்பு, விழாக்குழு உறுப்பினர்கள் எஸ்.ஆர்.சுவாமிநாதன், எம்.கே.மணி, காவிரி மைந்தன், ஏ.கே.நாகராஜன், அ.நாகப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











