ஷாருக், கரீனாவுக்கு பிலிம்பேர் விருது

By Staff

Kareena
53வது பிலிம்பேர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகருக்கான விருதினை ஷாருக் கானும், நடிகைக்கான விருதினை கரீனா கபூரும் பெற்றனர். அமீர்கான் சிறந்த இயக்குநருக்கான விருதைப் பெற்றார்.

புகழ் பெற்ற பிலிம்பேர் இதழின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்களுக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்திக்கு தனியாகவும், தென்னிந்திய மொழிகளுக்கு தனியாகவும் விருதுகள் வழங்கப்படுகின்றன.

சிறந்த இந்தித் திரைப்பட கலைஞர்களுக்கான 53வது பிலிம்பேர் விருது வழங்கும் நிகழ்ச்சி மும்பையில் நேற்று இரவு நடந்தது. இதில் ஷாருக் கான் சிறந்த நடிகருக்கான விருதினைப் பெற்றார். சக்தே இந்தியா படத்தில் நடித்ததற்காக அவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

சிறந்த நடிகருக்கான போட்டியில், தாரே ஜமீன் பர் படத்தில் நடித்த சிறுவன் தர்ஷீலும் இடம் பெற்றிருந்தான். ஆனால் அவருக்கு விருது கிடைக்கவில்லை.

சிறந்த நடிகைக்கான விருது ஜப் வி மெட் படத்தில் நடித்த கரீனா கபூருக்குக் கிடைத்தது.

தாரே ஜமீன் பர் படத்தை இயக்கிய அமீர் கானுக்கு சிறந்த இயக்குநருக்கான விருது கிடைத்தது. அப்படத்தின் கதாசிரியர் அமோல் குப்தேவுக்கு, சிறந்த கதாசிரியருக்கான விருது கிடைத்தது.

ரிஷிகபூருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்தது. சாவரியா படத்துக்கு இசையமைத்த மான்டி சர்மாவுக்கு, ஆர்.டி.பர்மான் விருது கிடைத்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X