மஸ்கட்டில் தேவா – எல் ஆர் ஈஸ்வரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

ஓமன் தலைநகர் மஸ்கட்டில் சாதகப் பறவைகள் சங்கர் குழுவினர் நடத்தும் சிறப்பு இசை நிகழ்ச்சியில் தேவா மற்றும் எல் ஆர் ஈஸ்வரி பங்கேற்றுப் பாடுகிறார்கள். இவர்களுடன் கார்த்திக், சுசித்ரா, சைந்தவி உள்பட பிரபல பாடகர்களும் பங்கேற்கிறார்கள்.
தமிழ் சினிமா வரலாற்றில் மறக்கமுடியாத திரைப்பாடல்களை இந்த மேடையில் பாடுகிறார்கள்.
8000 ரசிகர்கள் அமரும் பிரமாண்ட அரங்கில் இந்த விழா நடக்கிறது. நாளை வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு மஸ்கட் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
Comments
deva lr eswari life time achievement award award தேவா எல் ஆர் ஈஸ்வரி வாழ்நாள் சாதனையாளர் விருது விருது


Click it and Unblock the Notifications