தாய்லாந்து நாட்டு படத்துக்கு கேன்ஸ் விருது

63வது கேன்ஸ் பட விழா பிரான்சில் உள்ள கேன்ஸ் நகரில் நடந்தது. இதில் உலக நாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்ட சிறந்த படங்கள் திரையிடப்பட்டன. ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட உலக பிரபல நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர்.
இதற்கிடையே இன்று இந்த ஆண்டு சிறந்த படத்துக்கான கேன்ஸ் விருது அறிவிக்கப்பட்டது.
இதனை 'அங்கிள் பூன்மீ ஹூ கேன் ரீகால் ஹிஸ் பாஸ்ட் லைவ்ஸ்' என்ற தாய்லாந்துப் படம் தட்டிச் சென்றது. இந்தப் படத்தை அபிச்சாட்போங் வீரசேதகுல் என்பவர் இயக்கியிருக்கிறார். இந்தப் படத்துக்கு பெருமைக்குரிய தங்கப் பனைமர விருது அவருக்கு வழங்கப்பட்டது.
பிரிட்டிஷ் இயக்குநர் மிக்லேக் இயக்கிய 'அனதர் அவர்' என்ற படத்துக்கு கேன்ஸ் விருது கிடைக்கும் என அனைவரும் எதிர் பார்த்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக இந்த விருது தாய்லாந்து படத்துக்கு கிடைத்தது.
சிறந்த இயக்கநருக்கான விருது மாத்யூ அமால் ரிக்குக்கு கிடைத்தது. இவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். இவர் இயக்கிய ஆன்டூர் என்ற படத்துக்காக இந்த விருது வழங்கப்பட்டது.
சிறந்த நடிகை விருது 'செர்ட்டிபைட் காப்பி' என்ற பிரஞ்ச் படத்தில் நடித்த ஜூலியட் பினோச்சி- க்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகர் விருது 'பியூட்டிபுல்' படத்தில் நடித்த ஜேவியர் பார்டம்- க்கு அளிக்கப்பட்டது. ' அவர் லைப்' என்ற படத்தில் நடித்த எலியோ ஜெர்மனோ என்ற நடிகரும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்ததால், சிறந்த நடிகர் விருது இவருக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டது.
பிரான்சின் தலைசிறந்த நடிகரான மேத்யூ அமல்ரிக் இயக்கிய 'ஆன் டூர்' படத்திற்காக, அவருக்கு சிறந்த இயக்குநர் விருது தரப்பட்டது.
சிறந்த நடிகருக்கான விருது இந்த ஆண்டு 2 பேருக்கு பகிர்ந்து வழங்கப்பட்டது. பிரைடிபுல் என்ற படத்தில் நடித்த ஸ்பெயின் நடிகர் ஜாவியர் பார்டம் என்பவரும், 'அவர் லைப்' என்ற படத்தில் நடித்த இத்தாலி நடிகர் எரியோ ஜெர்மானோவுக்கும் கிடைத்தது.
சிறந்த திரைக்கதைக்கான விருது 'லீசாங்' என்ற தென் கொரிய டைரக்டருக்கு கிடைத்தது. 'டாங்யார் பொயட்ரி' என்ற படத்துக்காக இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











