ஸ்வாதிக்கு நந்தி விருது!

ஆந்திர மாநில அரசு ஆண்டுதோறும் தெலுங்குப் படக் கலைஞர்களுக்கு நந்தி விருதுகளை வழங்கி கெளரவித்து வருகிறது.
தற்போது 2008ம் ஆண்டுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அஷ்டசெம்மா படத்தில் சிறப்பாக நடித்ததற்காக ஸ்வாதிக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது.
அதேபோல ரவி தேஜா சிறந்த நடிகராகவும், சிறந்த படமாக கம்யமும் தேர்வாகியுள்ளன. கம்யம் படத்தில் நடித்த சுரேஷ், சிறந்த துணை நடிகராக தேர்வாகியுள்ளார்.
கம்யம் இயக்குநர் கிருஷ், சிறந்த இயக்குநர் விருதைப் பெறுகிறார்.
சிறந்த தொழில்நுட்பத்திற்கான விருது அனுஷ்கா நடித்த அருந்ததி படத்துக்குக் கிடைத்துள்ளது. இந்தப் படம் மொத்தம் 10 விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளது.
Comments


Click it and Unblock the Notifications