கெய்ரோ விழாவில் தமிழ்ப் படத்துக்கு வெள்ளிவிருது
கெய்ரோ சர்வதேச திரைப்பட விழாவில் 'முதல் முதல் முதல் வரை' தமிழ்த் திரைப்படம், வெள்ளி விருதை வென்றுள்ளது.
எகிப்து தலைநகர் கெய்ரோவில் 33-வது சர்வதேச படவிழா நடந்தது. இதில், திரையிடுவதற்காக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இந்திய படவிழா இயக்ககம் சார்பில் 'முதல் முதல் முதல் வரை' என்ற தமிழ் படம் அனுப்பி வைக்கப்பட்டது.
கிருஷ்ணன் சேஷாத்திரி கோமாடம் என்பவர் இயக்கிய இந்த படம் டிஜிட்டல் பிரிவில் வெள்ளி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது.
'முதல் முதல் முதல் வரை' படம், கடந்த ஆண்டு பனாஜியில் நடந்த சர்வதேச பட விழாவிலும் திரையிடப்பட்டது.
Comments


Click it and Unblock the Notifications