வெனிசுக்குப் போகும் மணிரத்னம்!
ராவணன் படம் தமிழ் - தெலுங்கு - இந்தியில் படு தோல்வியைத் தழுவினாலும், சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் வாய்ப்பு மட்டும் அதற்கு தவறாமல் கிடைத்துள்ளது.
வரும் செப்டம்பர் 6-ம் தேதி வெனிசில் நடக்கும் 67வது திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்படுகிறது. அதுமட்டுமல்ல, இந்த விழாவில் மணிரத்னத்துக்கு ஜேகர் - லெ கல்சர் குளோரி விருது வழங்கப்படுகிறது.
ராவணன் படத்தின் தமிழ் மற்றும் இந்தி பதிப்புகள் இரண்டுமே இந்த விழாவில் திரையிடப்பட உள்ளன.
இதுகுறித்து இந்த விழாவின் இயக்குநர் மார்கோ முல்லர் கூறுகையில், "மணிரத்னம் சிறந்த படைப்பாளி. பல புதுமைகளைப் புகுத்தியவர். அவரை கவுரவிப்பதில் பெருமை கொளிகிறோம்" என்றார்.
இந்த விழாவில் பங்கேற்க மணிரத்னம், விக்ரம், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் மற்றும் சுஹாஸினி உள்ளிட்டோர் வெனிஸ் செல்கின்றனர்.
More from Filmibeat
aishwarya rai award மணிரத்னம் ராவணன் விருது வெனிஸ் திரைப்பட விழா manirathnam raavan venice film festival vikram


Click it and Unblock the Notifications











