சுப்ரமணியபுரத்திற்கு மாத்ருபூமி விருது

By Staff

Ameer
பெரும் வெற்றி பெற்ற சுப்ரமணியபுரம் படத்திற்கு கேரளாவின் மாத்ருபூமி விருது கிடைத்துள்ளது.

புகழ் பெற்ற மலையாள நாளிதழ் மாத்ருபூமி. இந்த நிறுவனம் ஆண்டுதோறும் பல்வேறு திரைப்பட விருதுகளை வழங்கி வருகிறது.

இந்த ஆண்டின் மிகச் சிறந்த பிரமிப்புப் படம் என்று தமிழில் வெளியான சுப்ரமணியபுரத்தை மாத்ருபூமி தேர்ந்தெடுத்துள்ளது.

மாத்ருபூமி திரைப்பட விருதுகள் வழங்கும் விழா திருவனந்தபுரத்தில் நடந்தது. அப்போது சுப்ரமணியபுரம் படத்தின் இயக்குநர் சசிக்குமாரிடம் விருது வழங்கப்பட்டது.

இதுகுறித்து சசிக்குமார் கூறுகையில், மோகன்லால், மம்முட்டி ஆகிய மேதைகளுக்கு மத்தியில் என்னை அமர வைத்து அங்கு கெளரவப்படுத்தியதை மறக்க மாட்டேன்.

எனது படத்திற்கு சிறந்த பிரமிப்பூட்டும் என விருதளித்தனர். தமிழ் சினிமா ஒன்றுக்கு இப்படி ஒரு விருது கிடைத்திருப்பது இதுவே முதல் முறை என்று நினைக்கிறேன்.

மோகன்லால், சுப்ரமணியபுரம் படத்தில் இடம் பெற்ற கண்கள் இரண்டால் பாடல் தன்னை வெகுவாக கவர்ந்து விட்டதாக பாராட்டினார்.

மொழி, இனம், நிறம் ஆகியவற்றைத் தாண்டியது சினிமா என்பதை இந்த விருது நிரூபித்துள்ளது என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X