தசாவதாரத்திற்கு முதல் விருது!

By Staff

Dasavatharam movie still
கலைஞானி கமல்ஹாசனின் தசாவதாரம் படத்திற்கு முதல் விருது கிடைத்துள்ளது. அப்படத்தின் ஒலிப்பதிவாளர் எச்.ஸ்ரீதருக்கு, சிறந்த ஒலிப்பதிவாளருக்கான சாந்தாராம் விருது கிடைத்துள்ளது.

சிறந்த திரைப்படங்கள், கலைஞர்களுக்கான சாந்தாராம் விருது வழங்கும் விழா மும்பையில் நடந்தது.

இதில், தசாவதாரம் படத்தின் ஒலிப்பதிவாளர் எச்.ஸ்ரீதருக்கு சிறந்த ஒலிப்பதிவாளருக்கான விருது கிடைத்தது.

ஆமிர்கான் முதன் முதலில் இயக்கி நடித்த தாரே ஜமீன் பர் படமும், ஏ வெட்னஸ்டே படமும் பல விருதுகளை தட்டிச் சென்றன.

தாரே ஜமீன் பர் படத்திற்கு, சிறந்த படத்துக்கான சாந்தாராம் கோல்ட் விருதும், ஏ வெட்னஸ்டே மற்றும் மராத்தி படமான திங்கியா ஆகியவற்றுக்கு வெள்ளி மற்றும் வெண்கல விருதும் கிடைத்தன.

நீரஜ் பாண்டேவுக்கு சிறந்த இயக்குநருக்கான கோல்ட் விருதும், சிறந்த புதுமுக இயக்குநருக்கான விருதும் கிடைத்தது.

வெள்ளி விருது தாரே ஜமீன் பர் படத்தை இயக்கிய ஆமிர்கானுக்கும், ஜோதா அக்பர் படத்தை இயக்கி அசுதோஷ் கோவரிகருக்கு வெண்கல விருதும் கிடைத்தது.

தாரே ஜமீன் பர் படத்தில் நடிப்பில் கலக்கிய குட்டிப் பையன் தர்ஷீல் ஜப்ரிக்கு சிறந்த நடிகர் விருதும், ஐஸ்வர்யா ராய் பச்சனுக்கு (ஜோதா அக்பர்) சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்தது.

ஜோதா அக்பர் படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X