இன்று கலைமாமணி விருது விழா - கருணாநிதி வழங்குகிறார்

இவ்விழாவில், அசின், நயன்தாரா, மீரா ஜாஸ்மின் போன்ற முன்னணி நடிகைகள், ரஜினி மகள் ஐஸ்வர்யா தனுஷ், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், கலை இயக்குநர் பி கிருஷ்ணமூர்த்தி, நடிகர் பரத் உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட கலைஞர்கள், தமிழறிஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்கப்படுகிறது.
இந்த விழாவில் பங்கேற்க நடிகை அசின் நேற்றே மும்பையிலிருந்து வந்துவிட்டார்.
இந்த விருதினை வென்ற மூத்த கலைஞர்கள் மூவருக்கு ரூ.15000 ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது.
இன்று மாலை கலைவாணர் அரங்கில் நடக்கும் இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டன.
Comments


Click it and Unblock the Notifications