ஸ்னேகாவுக்கு நந்தி விருது

சிறந்த தெலுங்கு திரைப்பட கலைஞர்களுக்காக ஆந்திர மாநில அரசு ஆண்டுதோறும் நந்தி விருதுகளை வழங்கி கெளரவிக்கிறது.
இந்த ஆண்டுக்கான விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் ஸ்னேகாவுக்கு ராதாகோபாலம் படத்தில் நடித்ததற்காக சிறந்தநடிகைக்கான விருது கிடைத்துள்ளது.
இப்படம் சூப்பர் ஹிட் படமாகும். இதில் வக்கீல் வேடத்தில் நடித்திருந்தார் ஸ்னேகா. தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார்.
அடுத்த மாதம் ஹைதராபாத்தில் விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது. விருது கிடைத்திருப்பது குறித்து ஸ்னேகா சந்தோஷமும், மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளார்.
தமிழ் நடிகை ஒருவர் சிறந்த நடிகைக்கான நந்தி விருதை தொடர்ச்சியாக பெறுவது இது இரண்டாவது முறையாகும். கடந்த ஆண்டு த்ரிஷாவுக்கு சிறந்த நடிகை விருது கிடைத்தது என்பது நினைவிருக்கலாம்.
Comments


Click it and Unblock the Notifications