Just In
- 8 hrs ago
குட்டை உடையில் தொடை தெரிய போஸ்..கவர்ச்சி விருந்தளிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் !
- 8 hrs ago
அட இது என்ன ஃபேஷன்...இதுவும் நல்லத்தான் இருக்கு.. கலக்குங்க சமந்தா !
- 8 hrs ago
கடற்கரையில் ஜிலேபி கொண்டையுடன் காத்து வாங்கும் மடோனா செபாஸ்டின்!
- 10 hrs ago
கவர்ச்சி காட்டி ரசிகர்களை கதறவிடும் காட்டேரி பட நடிகை!
Don't Miss!
- News
பிடன் போட்ட முதல் கையெழுத்து.. முஸ்லிம்கள், பருவ நிலை, சுவர், குப்பைக்கு போன டிரம்பின் கொள்கைகள்! .
- Automobiles
மூன்று புதிய நிறங்களில் விற்பனைக்கு அறிமுகமானது யமஹா ஆர்15 வி3 பைக்... அனைத்தும் உங்களை நிச்சயம் கவரும்!!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 21.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் எந்தவொரு அவசர முடிவையும் எடுக்கக்கூடாது…
- Sports
கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்!
- Finance
வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..!
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தமிழக அரசின் திரை விருதுகள் அறிவிப்பு - சிறந்த நடிகர்கள் கமல், ரஜினி - வசனகர்த்தா கருணாநிதி
சென்னை: தமிழக அரசின் சிறந்த திரைப்படக் கலைஞர்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2007ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது ரஜினிகாந்த்துக்கும், 2008ம் ஆண்டுக்கான சிறந்த நடிகர் விருது கமல்ஹாசனுக்கும் கிடைத்துள்ளது.
உளியின் ஓசை படத்தில் வசனம் எழுதிய முதல்வர் கருணாநிதிக்கு சிறந்த வசனகர்த்தாவுக்கான விருது கிடைத்துள்ளது.
ரஜினி, கமலுக்கு விருது கிடைக்கப் போவதை உங்கள் தட்ஸ்தமிழ் முன்பே தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
2007, 2008ம் ஆண்டுக்கான விருதுகள் குறித்து முறைப்படி அரசு செய்தி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
விருதுகள் - 2007...
2007 மற்றும் 2008-ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு, திரைப்பட விருதுகளுக்கான பரிந்துரைகளை வழங்கிட நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
அந்த குழுவின் பரிந்துரைகளை அப்படியே ஏற்றுக்கொண்டு விருதுகளுக்கான விவரங்களை தமிழக அரசு நேற்று அறிவித்துள்ளது. விருதுகளுக்கான விவரம் வருமாறு:
சிறந்த படம் - சிவாஜி
சிறந்த படம்: முதல் பரிசு- சிவாஜி, இரண்டாம் பரிசு-மொழி, மூன்றாம் பரிசு-பள்ளிக்கூடம், சிறப்பு பரிசு-பெரியார்.
பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம் - சிறப்பு பரிசு- மிருகம், அளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளைப் பிரதிபலிக்கின்ற படம் - முதல் பரிசு- தூவானம்.
சிறந்த நடிகர்- ரஜினிகாந்த் (சிவாஜி), சிறந்த நடிகை- ஜோதிகா (மொழி), சிறந்த நடிகர்- சிறப்பு பரிசு- சத்யராஜ் (பெரியார்), சிறந்த நடிகை சிறப்பு பரிசு- பத்மப்பிரியா (மிருகம்), சிறந்த வில்லன் நடிகர்- சுமன் (சிவாஜி),
சிறந்த நகைச்சுவை நடிகர்- விவேக் (சிவாஜி), சிறந்த குணசித்திர நடிகர்- எம்.எஸ்.பாஸ்கர் (மொழி), சிறந்த குணசித்திர நடிகை- அர்ச்சனா (ஒன்பது ரூபாய் நோட்டு),
சிறந்த இயக்குநர்- தங்கர் பச்சான் (பள்ளிக்கூடம்), சிறந்த கதையாசிரியர்- எஸ்.எம்.வசந்த் (சத்தம் போடாதே), சிறந்த உரையாடல் ஆசிரியர்- பாலாஜி சக்திவேலு (கல்லூரி), சிறந்த இசையமைப்பாளர்- வித்யாசாகர் (மொழி), சிறந்த பாடலாசிரியர்- வைரமுத்து (பெரியார் மற்றும் பல படங்கள்),
சிறந்த பின்னணி பாடகர்- ஸ்ரீநிவாஸ் (ஒன்பது ரூபாய் நோட்டு), சிறந்த பின்னணி பாடகி- சின்மயி (சிவாஜி), சிறந்த ஒளிப்பதிவாளர்- நீரவ்ஷா (பில்லா), சிறந்த ஒலிப்பதிவாளர்- யு.கே.அய்யப்பன் (பில்லா), சிறந்த எடிட்டர்- சதீஷ் குரோசோவா (சத்தம் போடாதே).
சிறந்த கலை இயக்குநர்- தோட்டா தரணி (சிவாஜி), சிறந்த சண்டை பயிற்சியாளர்- அனல் அரசு (கருப்பசாமி குத்தகைதாரர்), சிறந்த நடன ஆசிரியர்- பிருந்தா (தீபாவளி), சிறந்த ஒப்பனைக் கலைஞர்- ராஜேந்திரன் (பெரியார்), சிறந்த தையல் கலைஞர்- அனுவர்தன் (பில்லா), சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர்- (ஆண்) கே.பி.சேகர் (மலரினும் மெல்லிய), சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர்- (பெண்) மகாலட்சுமி (மிருகம்)
விருதுகள் - 2008
சிறந்த படம்: முதல் பரிசு- தசாவதாரம், இரண்டாம் பரிசு- அபியும் நானும், மூன்றாம் பரிசு- சந்தோஷ் சுப்பிரமணியம், சிறப்பு பரிசு- மெய்ப்பொருள், பெண்களைப் பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம்: சிறப்பு பரிசு- பூ.
அளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளைப் பிரதிபலிக்கின்ற படம்- முதல் பரிசு- வல்லமை தாராயோ, அளவான, திட்டமிட்ட குடும்ப நெறிகளைப் பிரதிபலிக்கின்ற படம்:- இரண்டாம் பரிசு- வண்ணத்துப் பூச்சி.
சிறந்த நடிகர் கமல்ஹாசன்
சிறந்த நடிகர்- கமல்ஹாசன் (தசாவதாரம்), சிறந்த நடிகை- சிநேகா (பிரிவோம் சந்திப்போம்), சிறந்த நடிகர்- சிறப்பு பரிசு- சூர்யா (வாரணம் ஆயிரம்), சிறந்த நடிகை சிறப்பு பரிசு- திரிஷா (அபியும் நானும்), சிறந்த வில்லன் நடிகர்- ராஜேந்திரன் (நான் கடவுள்).
சிறந்த நகைச்சுவை நடிகர்- வடிவேலு (காத்தவராயன்), சிறந்த நகைச்சுவை நடிகை- கோவை சரளா (உளியின் ஓசை), சிறந்த குணசித்திர நடிகர்- பிரகாஷ்ராஜ் (பல படங்கள்), சிறந்த குணசித்திர நடிகை- பூஜா (நான் கடவுள்), சிறந்த இயக்குநர்- ராதா மோகன் (அபியும் நானும்), சிறந்த கதையாசிரியர்- தமிழ்ச்செல்வன் (பூ).
வசனகர்த்தா - கருணாநிதி
சிறந்த உரையாடல் ஆசிரியர்- கலைஞர் மு.கருணாநிதி (உளியின் ஓசை), சிறந்த இசையமைப்பாளர்- இளையராஜா (அஜந்தா), சிறந்த பாடலாசிரியர்- வாலி (தசாவதாரம்), சிறந்த பின்னணி பாடகர்- பெள்ளிராஜ் (சுப்பிரமணியபுரம்), சிறந்த பின்னணி பாடகி- மஹதி (நெஞ்சத்தைக் கிள்ளாதே).
சிறந்த ஒளிப்பதிவாளர்- ஆர்தர் ஏ.வில்சன் (நான் கடவுள்), சிறந்த ஒலிப்பதிவாளர்- ரவி (வாரணம் ஆயிரம்), சிறந்த எடிட்டர்-பிரவீன்- ஸ்ரீகாந்த் (சரோஜா), சிறந்த கலை இயக்குநர்- ராஜீவன் (வாரணம் ஆயிரம்), சிறந்த சண்டை பயிற்சியாளர்- கனல் கண்ணன் (சிலம்பாட்டம்).
சிறந்த நடன ஆசிரியர்- சிவசங்கர் (உளியின் ஓசை), சிறந்த ஒப்பனைக் கலைஞர்- மைக்கேல் வெஸ்ட்மோர்- கோதண்டபாணி (தசாவதாரம்), சிறந்த தையல் கலைஞர்- ரவீந்திரன் (பிரிவோம் சந்திப்போம்). சிறந்த குழந்தை நட்சத்திரம்- ஸ்ரீலட்சுமி (வண்ணத்துப்பூச்சி), சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (ஆண்)- எம்.ஏ.பிரகாஷ் (கி.மு.), சிறந்த பின்னணி குரல் கொடுப்பவர் (பெண்)- சவீதா (பல படங்கள்)
2006-2007-ம் ஆண்டுக்கான திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள்:
சிறந்த இயக்குநர்- ச.அன்பு (அரிதாரம்), சிறந்த ஒளிப்பதிவாளர்- பா.தினேஷ் கிருஷ்ணன் (திற), சிறந்த ஒலிப்பதிவாளர்- எம்.ராம்குமார் (தாய்), சிறந்த எடிட்டர்- பி.சசிகுமார் (தாய்), சிறந்த படம் பதனிடுபவர்- ரா.முருகன் (அகத்திணை)
2007-2008-ம் ஆண்டுக்கான திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர் விருதுகள்:
சிறந்த இயக்குநர்- மு.கண்ணன் (அச்சுப்பிழை), சிறந்த ஒளிப்பதிவாளர்- ஆனந்தகுமார் (பழைய படம், சிறந்த ஒலிப்பதிவாளர்- லட்சுமி நாராயணன் (கனா), சிறந்த எடிட்டர்- பி.மர்பி (கனவு மெய்ப்பட), சிறந்த படம் பதனிடுபவர்- வெங்கடேஷ் பிரசாத் (கனா).
இவ்வாறு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
ரஜினிகாந்த் தனது 60வது வயதில் காலடி எடுத்து வைக்கிறார். திரையுலகில் பொன் விழா காணுகிறார் கமல்ஹாசன். இந்த நிலையில் இவர்கள் இருவரும் சிறந்த நடிகர்களாக தேர்வு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.