»   »  விஜய் டிவி விருது… "லவ்வபிள் ஜோடி" கார்த்திக் ராஜிக்கு கிடைக்குமா?

விஜய் டிவி விருது… "லவ்வபிள் ஜோடி" கார்த்திக் ராஜிக்கு கிடைக்குமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் தொலைக்காட்சியின் 2ம் ஆண்டு டெலிவிஷன் விருது வழங்கும் விழா வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த சீரியல், சிறந்த ஜோடி, சிறந்த சீரியல் ஹீரோ, ஹீரோயின் ஆகியோருக்கும் சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கும் விருது வழங்குவார்கள்.

திரைப்பட நட்சத்திரங்களுக்காக ஆண்டு தோறும் விஜய் அவார்ட்ஸ் வழங்கிய விஜய் டிவி தொலைக்காட்சி கலைஞர்களுக்காக கடந்த ஆண்டு முதல் விருது வழங்கத் தொடங்கியுள்ளது.

விஜய் டெலிவிஷன் விருது

இந்த ஆண்டுக்கான விருது வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என விஜய் டிவியின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீராம் அறிவித்துள்ளார்.

சிறந்த சீரியல் எது?

சிறந்த சீரியல் எது?

விஜய் டிவியில் ஆபிஸ், தாயுமானவன், சரவணன் மீனாட்சி, தெய்வம் தந்த வீடு, புதுக்கவிதை, ரெட்டை வால் குருவி, கல்யாணம் முதல் காதல்வரை, ஆண்டாள் அழகர் என பல சீரியல்கள் ஒளிபரப்பாகின்றன. இதில் எது சிறந்த சீரியல் என 30 பகுதிகளில் வாசகர்கள் தேர்வு செய்வதைப் பொறுத்து விருது வழங்கப்படும்.

கார்த்திக் - ராஜி

விஜய் டெலிவிசன் விருது பற்றிய அறிவிப்பு வெளிவந்த உடனேயே சிறந்த சீரியல் ஹீரோ, ஹீரோயின், சிறந்த ஜோடி யார் என்ற பரபரப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. ஆபிஸ் சீரியலில் நடித்த கார்த்திக் - ராஜி சிறந்த ஜோடியாக விருது பெற வேண்டும் என்கிறார் ஒரு ரசிகர்.

விஷ்ணு - லஷ்மி

விஷ்ணு - லஷ்மி

இதேபோல ஆபிஸ் சீரியலில் நடித்த விஷ்ணு - லஷ்மிக்கு சிறந்த ஜோடிக்கான விருது கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ஆண்டாள் அழகரில் நடித்துள்ள கல்யாணி,

சிறந்த நடிகை ஸ்ருதியா?

சிறந்த நடிகையாக ஆபிஸ் சீரியலில் நடித்த ஸ்ருதி ராஜ் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று டுவிட்டரில் கருத்திட்டுள்ளார் ஒரு ரசிகர்கள். அதற்காக இப்போதே ஸ்ருதிக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

சிறந்த நடிகை கல்யாணியா?

சிறந்த நடிகை கல்யாணியா?

தாயுமானவன், ஆண்டாள் அழகர் தொடரில் நடித்துள்ள கல்யாணி சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட வேண்டும் என்று பதிவிட்டுள்ளார் ஒரு ரசிகர்.

சிறந்த தொகுப்பாளினி யார்?

சிறந்த தொகுப்பாளினி யார்?

கடந்த முறை சிறந்த தொகுப்பாளினி விருது திவ்யதர்ஷினிக்கு வழங்கப்பட்டது. சிறந்த தொகுப்பாளர் விருது கோபிநாத்துக்கு கிடைத்தது. இம்முறை யாருக்கு விருது கிடைக்கிறதோ?

ரீல் ஜோடி ரியல் ஜோடியான கதை

ரீல் ஜோடி ரியல் ஜோடியான கதை

கடந்த ஆண்டு விஜய் டிவி ரசிகர்களால் சிறந்த ஜோடியாக தேர்வு செய்யப்பட்ட மிர்ச்சி செந்தில் - ஸ்ரீஜா ஜோடி திருமணம் செய்து கொண்டு ரியல் ஜோடியாகிவிட்டனர். இந்த ஆண்டு யார் சிறந்த ஜோடியாக ரசிகர்களால் தேர்வு செய்யப்படுகிறார்களோ பார்க்கலாம்.

English summary
The latest news is that the plans for the second Vijay Television Awards have started.
Please Wait while comments are loading...