ஜப்பான் அகாடமி விருது பட்டியலில் '3 இடியட்ஸ்'

By Mayura Akilan

ஆமிர்கான், மாதவன் நடிப்பில் வெளிவந்த '3 இடியட்ஸ்' பாலிவுட் திரைப்படம், 37வது ஜப்பான் அகாடமி விருது பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.

'3 இடியட்ஸ்' திரைப்படம் 2009ல் இந்தியாவில் வெளியானாலும், 2013ல் தான் ஜப்பான் நாட்டில் வெளியானது.

எனவேதான் 37 வது ஜப்பான் அகாடமி விருதுகள் பட்டியலில் '3 இடியட்ஸ்' படம் இடம்பெற்று இருக்கிறது.

ஆமிர்கான் – கரீனா கபூர்

ஆமிர்கான் – கரீனா கபூர்

ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் ஆமிர்கான், மாதவன், ஷர்மான் ஜோஷி, கரீனா கபூர் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2009ம் ஆண்டு வெளிவந்தது.

கற்பிக்கும் நிலை

கற்பிக்கும் நிலை

இந்தியாவில் உள்ள கல்வி கற்பிக்கும் நிலையை முன்னிறுத்தி எடுக்கப்பட்ட படம் 3 இடியட்ஸ். இந்தப் படம் விமர்சகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் அமோக வரவேற்பை பெற்று வசூலையும் வாரிக்குவித்தது.

பாசிடிவ் எனர்ஜி

பாசிடிவ் எனர்ஜி

நேர்மறை எண்ணம் கொண்ட கதாநாயகன் அடிக்கடி உபயோகிக்கும் ஜப்பான் அகாடமி விருதுகள் பட்டியலின் இணையத்தில் ‘ஐ ஆம் ஸ்யூர் கோ வெல்' என்ற பெயரில் இப்படம் இடம்பெற்றிருக்கிறது.

கிராவிட்டி

கிராவிட்டி

இப்படத்துடன் கேப்டன் பிலிப்ஸ், கிராவிட்டி உள்ளிட்ட படங்களும் இடம்பெற்றிருக்கின்றன. மார்ச் 7ம் தேதி டோக்கியோவில் உள்ள க்ராண்ட் பிரின்ஸ் ஹோட்டலில் 37வது ஜப்பான் அகாடமி விருதுகள் நடைபெறவிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X