லதா மங்கேஷ்கருக்கு பிரான்ஸின் உயரிய விருது

பிரான்ஸ் நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருதுகளில் இரண்டாவது பெரிய விருது இது. முதல் விருது செவாலியே. பிரான்ஸ் பேரரசர் நெப்போலியனால் மே 19, 1802-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது இந்த விருது.
இதற்கு முன் இயக்குநர் சத்யஜித் ரே மற்றும் பாலிவுட் நடிகர் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இசைத் துறையில் லதா மங்கேஷ்கரின் 60 ஆண்டு கால இணையற்ற சேவையை அங்கீகரிக்கும் பொருட்டு இந்த விருது வழங்கப்பட இருப்பதாக, இந்தியாவிற்கான பிரான்ஸ் தூதர் ஜெரோம் போன்னபான்ட் தெரிவித்துள்ளார்.
வரும் டிசம்பர் 2 ந் தேதி மும்பையில் நடைபெறும் விழாவில் இந்த விருது வழங்கப்படும்.
Comments
நெப்போலியன் பிரான்ஸ் நாட்டு விருது லதா மங்கேஷ்கர் civilian award lata mangeshkar music napolean officer of the legion of honour


Click it and Unblock the Notifications