twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    லதா மங்கேஷ்கருக்கு பிரான்ஸின் உயரிய விருது

    By Staff
    |

    Lata Mangeshkar
    இந்தியாவின் இசையரசி என்ற பெருமைக்குரிய லதா மங்கேஷ்கருக்கு பிரான்சின் மிக உயர்ந்த விருதான 'ஆபிசர் ஆப் த லிஜன் ஆப் ஹானர்' என்ற விருது அறிவிக்கப்பட்டுள்ளது (Officier de la Legion d'Honneur' -Officer of the Legion of Honour).

    பிரான்ஸ் நாட்டின் மிக உயர்ந்த சிவிலியன் விருதுகளில் இரண்டாவது பெரிய விருது இது. முதல் விருது செவாலியே. பிரான்ஸ் பேரரசர் நெப்போலியனால் மே 19, 1802-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது இந்த விருது.

    இதற்கு முன் இயக்குநர் சத்யஜித் ரே மற்றும் பாலிவுட் நடிகர் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

    இசைத் துறையில் லதா மங்கேஷ்கரின் 60 ஆண்டு கால இணையற்ற சேவையை அங்கீகரிக்கும் பொருட்டு இந்த விருது வழங்கப்பட இருப்பதாக, இந்தியாவிற்கான பிரான்ஸ் தூதர் ஜெரோம் போன்னபான்ட் தெரிவித்துள்ளார்.

    வரும் டிசம்பர் 2 ந் தேதி மும்பையில் நடைபெறும் விழாவில் இந்த விருது வழங்கப்படும்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X