மீரா நாயருக்கு விருது

வட அமெரிக்காவின் மிகப் பெரிய இந்திய நாளிதழ் இந்தியா அப்ராட். நியூயார்க்கிலிருந்து இது வெளியாகிறது. இந்த நாளிதழ் கடந்த 2002ம் ஆண்டு முதல் சிறந்த மனிதருக்கான விருதினை ஆண்டுதோறும் வழங்கி வருகிறது.
2007ம் ஆண்டுக்கான விருதினை மீரா நாயர் பெற்றுள்ளார். 50 வயதாகும் மீரா நாயரின் திரைப்பட சேவையை பாராட்டி இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விருதினைப் பெற்றுக் கொண்ட மீரா நாயர், தனது தாய்க்கு இந்த விருதினை காணிக்கை ஆக்குவதாக தெரிவித்தார்.
சலாம் பாம்பே, மிஸ்ஸிஸிப்பி மசாலா, மான்சூன் வெட்டிங் ஆகியவை மீரா நாயரின் முத்திரைப் படங்களில் சில.
நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் பெப்சிகோ நிறுவன தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான இந்திரா நூயி, விருதினை வழங்கினார்.
இந்திரா நூயி 2006ம் ஆண்டுக்கான சிறந்த மனிதர் விருதினைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இளம் சாதனையாளர் விருது சோம்தேவ் தேவ் பர்மனுக்குக் கிடைத்தது. அமெரிக்க கல்லூரி டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பர்மனுக்கு உண்டு. இவர் பிரபல இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மனின் தூரத்து உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த சமூக சேவைக்கான விருதினை டாக்டர் நவீன் ஷாவும், வாழ்நாள் சாதனையாளர் விருதை டாக்டர் ஜாய் செரியனும் பெற்றனர்.


Click it and Unblock the Notifications











