எஸ்பிபிக்கு பி.சுசீலா அறக்கட்டளை விருது

SP Balasubramaniam
பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்துக்கு, 2009-ம் ஆண்டுக்கான பி சுசீலா அறக்கட்டளை விருது வழங்கப்படுகிறது.

திரையுலகில் சாதனை படைத்த இசை கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க பாடகி பி சுசீலா தனது பெயரில் அறக்கட்டளை ஒன்றை சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கினார்.

ஆண்டுதோறும் இந்த 'சுசீலா விருது' வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு எஸ்.ஜானகிக்கு இந்த விருது வழங்கப்பட்டது. இந்த ஆண்டு எஸ்.பி.பாலசுப்ரமணியம் பெறுகிறார். ரூ. 1 லட்சம் பரிசும் வழங்கப்படுகிறது. நவம்பர் 14ம் தேதி ராயப்பேட்டை வெஸ்லி மைதானத்தில் விழா நடக்கிறது.

இந்த விழாவில் இசையமைப்பாளர்கள் பாலமுரளிகிருஷ்ணா, எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, டிஎம் சவுந்திரராஜன், எஸ்.ஜானகி, பி.பி.சீனிவாஸ் உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

யூ.கே.முரளி இசையில் இந்த மேதைகள் பாட ஒப்புக் கொண்டுள்ளதாக சுசீலா தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் திரளும் நிதியில் பாதி, ஆந்திர வெள்ள நிவாரணத்துக்கு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

விழாவுக்கு கமல்ஹாஸன் தலைமை தாங்குகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X