twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இளையராஜா உள்ளிட்ட இசையமைப்பாளர்களுக்கு லண்டன் ட்ரினிட்டி கல்லூரி விருது!

    By Chakra
    |

    London Trinity College
    இசைஞானி இளையராஜா உள்பட 6 தமிழ் இசையமைப்பாளர்களுக்கு புகழ்பெற்ற லண்டன் ட்ரினிட்டி இசைக் கல்லூரி விருதளித்து கவுரவப்படுத்துகிறது.

    பிரிட்டனில் உள்ள இந்த இசைக் கல்லூரி 110 ஆண்டு பாரம்பரியம் மிக்கது. இந்தக் கல்லூரியின் இசைப் பட்டப்படிப்பு மிகுந்த மரியாதைக்குரியது.

    இந்தக் கல்லூரியில் பட்டம் பெற்று இன்று இசைத் துறையில் சிகரம் தொட்ட கலைஞர்கள் ஏராளம்.

    அப்படி சாதனைப் படைத்த தமிழகத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர்களுக்கு விருதளித்துப் பாராட்டுவிழா நடத்துகிறது லண்டன் ட்ரினிட்டி இசைக் கல்லூரி.

    இசைஞானி இளையராஜா, இந்தக் கல்லூரியில் இசைப் படிப்பில் 'கிளாஸிகல் கிடார்' பிரிவில் தங்கப் பதக்கம் வாங்கியவர்.

    இளையராஜா தவிர, வயலின் இசைக் கலைஞர் எல் சுப்பிரமணியம், இசையமைப்பாளர்கள் ஹாரிஸ் ஜெயராஜ், பி கணேஷ் குமார், மணிஷர்மா மற்றும் விஎஸ் நரசிம்மன் ஆகியோரும் இந்த விழாவில் கவுரவிக்கப்படுகிறார்கள்.

    சென்னை சேத்பட்டில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளி அரங்கில் நாளை மாலை 7 மணிக்கு நடக்கும் இந்த பாராட்டு விழாவில் லண்டன் டிரினிட்டி கல்லூரியின் சிஇஓ சாரா கெம்ப், நிர்வாக இயக்குநர் மார்க் ஸ்ட்ரிஞ்ஜர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X