»   »  காமக்கொடூரன் ராம் ரஹீமுக்கு பத்ம விருது கொடுக்கணுமாம்: 4,200 பேர் பரிந்துரை

காமக்கொடூரன் ராம் ரஹீமுக்கு பத்ம விருது கொடுக்கணுமாம்: 4,200 பேர் பரிந்துரை

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: சாமியாரும், நடிகருமான ராம் ரஹீம் சிங்கிற்கு பத்ம விருது அளிக்கக் கோரி 4 ஆயிரத்து 208 பேர் மத்திய அரசிடம் பரிந்துரை செய்துள்ளனர்.

பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சாமியார் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அந்த காமக்கொடூர சாமியார் நானும் ஹீரோவாகியே தீருவேன் என்று அடம்பிடித்து 5 படங்களில் நடித்துள்ளார்.

அந்த படங்களின் ட்ரெய்லரை பார்த்தே பலருக்கு மயக்கம் வந்துவிட்டது. அந்த அளவுக்கு நடிப்பில் அசத்தியிருந்தார் சாமியார்.

பத்ம விருது

பத்ம விருது

ராம் ரஹீம் சிங்கிற்கு பத்ம விருது அளிக்குமாறு கூறி 4 ஆயிரத்து 208 பேர் மத்திய அரசிடம் பரிந்துரை செய்துள்ளனர். அவருக்கு சிறை தண்டனை கிடைப்பதற்கு முன்பு மக்கள் இந்த பரிந்துரையை செய்துள்ளனர்.

விருது

விருது

2017ம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு ராம் ரஹீம் சிங்கின் பெயரை பரிந்துரை செய்ய வேண்டும் என்றே ஆட்களை வைத்து இந்த வேலையை செய்துள்ளார்கள் என்று கூறப்படுகிறது. முந்தைய ஆண்டுகளில் அவரின் பெயரை யாரும் பரிந்துரை செய்யவில்லை.

பரிந்துரை

பரிந்துரை

பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ விருதுகளுக்கு யார் வேண்டுமானாலும் பரிந்துரை செய்யலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி தான் ராம் ரஹீம் சிங்கை பலர் பரிந்துரை செய்துள்ளனர். அதில் பெரும்பாலான பரிந்துரைகள் ஹரியானா மாநிலம் சிர்சாவில் இருந்து வந்துள்ளது. சிர்சாவில் தான் ராம் ரஹீம் சிங்கின் தலைமையகம் சுமார் 800 ஏக்கரில் அமைந்துள்ளது.

அமித்

அமித்

சிர்சாவை சேர்ந்த அமித் என்பவர் ராம் ரஹீம் சிங்கின் பெயரை 31 முறை பரிந்துரை செய்துள்ளார். மற்றொரு நபரான சுனில் என்பவர் சாமியாரின் பெயரை 27 முறை பரிந்துரை செய்துள்ளார். ராம் ரஹீம் சிங்கே தனது பெயரை 5 முறை பரிந்துரை செய்துள்ளார்.

நடிப்பு

நடிப்பு

2 அல்ல பல பெண் சீடர்களை ராம் ரஹீம் சிங் பலாத்காரம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் தனக்கு ஆண்மையே இல்லை என்று பொய் சொல்லியுள்ளார் ராம் ரஹீம் சிங்.

English summary
Central government has received 4,208 recommendations for a Padma award to rapist guru cum actor Dera Sacha Sauda sect chief Gurmeet Ram Rahim Singh.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil