நாக்பூர் திரைப்பட விழாவில் இளைஞனுக்கு 5 விருதுகள்!!

கருணாநிதி பணியாற்றி 75 வது படம் இது. பா விஜய், குஷ்பூ, சுமன் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் பொங்கலுக்கு வெளியானது.
கடந்த பிப்ரவரி 4 முதல் 10 ம் தேதி வரை நாக்பூரில் நடந்த 2 வது சர்வதேச திரைப்பட விழாவில் இளைஞன் படமும் பங்கேற்றது. இந்த விழாவிலஸ் அந்தப் படத்துக்கு 5 விருதுகள் தரப்பட்டுள்ளன.
சிறந்த வசனகர்த்தா விருது முதல்வர் கருணாநிதிக்கும், சிறந்த நடிகைக்கான சிறப்பு விருது குஷ்புவுக்கும், சிறந்த இயக்குநருக்கான சிறப்பு விருது சுரேஷ் கிருஷ்ணாவுக்கும், இப்படத்தில் இடம்பெற்ற தோழா.. பாடலுக்காக சிறந்த பாடலாசிரியர் விருது பா விஜய்க்கும் வழங்கப்பட்ன. இதைத் தவிர கருணாநிதிக்கு திரைத்துறையின் இதயம் என்ற விருதும் வழங்கப்பட்டன.
குஷ்புவும், சுரேஷ் கிருஷ்ணாவும் விழாவுக்கு நேரில் போயிருந்தனர்.
Comments


Click it and Unblock the Notifications