சென்னையில் நடந்த பிலிம்ஃபேர் விருது விழா: கமல், ரஹ்மான், ரேகா, மகேஷ்பாபு பங்கேற்பு
சென்னை: 61வது பிலிம்ஃபேர் விருது விழா சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
61வது பிலிம்ஃபேர் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் உள்ள நேரு ஸ்டேடியத்தில் சனிக்கிழமை பிரமாண்டமாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் தென்னிந்திய திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சி குறித்த சில விவரங்களை பார்ப்போம்.

ஐஸ்வர்யா
நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா விருது விழாவுக்கு ஸ்ட்ராப்லெஸ் கவுனில் வந்திருந்தார்.

தன்ஷிகா
நடிகை தன்ஷிகா விருது விழாவுக்கு வந்தபோது எடுத்த படம். பரதேசி படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருது அவருக்கு கிடைத்தது.

நஸ்ரியா
விரைவில் நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்துகொள்ளப் போகும் நடிகை நஸ்ரியா நஸீம்.

கமல்
உத்தம வில்லன் படப்பிடிப்பில் பிசியாக இருந்த கமல் விருது விழாவிற்கு வந்திருந்தார்.

சின்மயி
அண்மையில் காதல் திருமணம் செய்து கொண்ட பாடகி சின்மயி தனது கணவர் ராகுலுடன் சேர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

ரேகா
எவர்கிரீன் ஹீரோயின் ரேகாவும், குஷ்புவும் கையை பிடித்துக் கொண்டு பேசியபோது கிளிக்கியது.

ஸ்ருதி
தெலுங்கில் போட்டி போட்டுக் கொள்ளும் ஸ்ருதி ஹாஸனும், தமன்னாவும் கன்னத்தோடு கன்னம் வைத்து போஸ் கொடுத்தனர்.

தனுஷ்
விருது விழாவில் தனுஷ், தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் கலக்கலாக போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். ஐஸ் சூப்பர்.

ரேகாஜி
இந்தி திரையுலகில் பிரபலமான நடிகை ரேகாவுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்த கமல் ஹாஸன்.

ரஹ்மான்
கடல் படத்திற்காக சிறந்த இசையமைப்பாளருக்கான விருது இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது.

ஆஸ்கர் நாயகன்
ஆஸ்கர் நாயகன் ரஹ்மானுக்கு வயதானாலும் தோற்றத்தில் ஒன்னுமே தெரியலையேப்பா.

சமந்தா
விஜய்யுடன் கத்தி படத்தில் நடித்து வரும் சமந்தா சூப்பராக விருது விழாவுக்கு வந்திருந்தார்.

மகேஷ்பாபு
ஆண்டுகள் செல்ல செல்ல தெலுங்கு ஹீரோ மகேஷ்பாபுவின் இளமையும் அதிகரித்துக் கொண்டே போகிறது.

டாப்ஸி
விருது விழாவில் மேடையில் பாடல் ஒன்றுக்கு டான்ஸ் ஆடிய நடிகை டாப்ஸி.

நல்லா இருக்கு
நிகழ்ச்சிக்கு வந்திருந்த மகேஷ் பாபு அருகில் அமர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் ஸ்ருதி ஹாஸன்.

நயன்தாரா
விருது வழங்கும் விழாவுக்கு சேலையில் அம்சமாக வந்த நயன்தாரா.
சிறந்த நடிகைக்கான விருது ராஜாராணி படத்திற்காக நயன்தாராவுக்கு வழங்கப்பட்டது.

விருது
விழா மேடையில் தனுஷுடன் ரேகாஜி.

டான்ஸ்
நிகழ்ச்சியில் சூப்பராக டான்ஸ் ஆடிய ஸ்ருதி ஹாஸன்.

அதர்வா
பாணா காத்தாடி படத்தில் ஜோடியாக நடித்த அத்ரவா முரளி, சமந்தா விருது விழா மேடையில். பரதேசி படத்திற்காக அதர்வாவுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.


Click it and Unblock the Notifications











