»   »  எல்லோரும் பார்த்து ரசித்த பாகுபலி... 2015ல் இந்தியாவின் சிறந்த படம்.. தேசிய விருதுகள்

எல்லோரும் பார்த்து ரசித்த பாகுபலி... 2015ல் இந்தியாவின் சிறந்த படம்.. தேசிய விருதுகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: 63 வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் பாகுபலி சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

Select City
Buy Baahubali 2: The Conclusion (U/A) Tickets

2015 ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் பெறுவோர் குறித்த அறிவிப்புகள் டெல்லியில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.


இதில் நடிகர் அமிதாப்பச்சன், நடிகை கங்கனா ரனாவத் ஆகியோர் சிறந்த நடிகர், நடிகைக்கான விருதுகளை வென்றுள்ளனர்.


பாகுபலி

பாகுபலி

63 வது தேசிய விருதுகள் விழாவில் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்த ராஜமௌலியின் பாகுபலி, சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யபட்டுள்ளது.


அமிதாப்பச்சன்

அமிதாப்பச்சன்

சிறந்த நடிகராக அமிதாப்பச்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமிதாப் பச்சன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பிக்கு(இந்தி) திரைப்படத்திற்காக இந்த விருது அவருக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் 4 வது முறையாக தேசிய விருதை அமிதாப்பச்சன் வென்றுள்ளார்.


கங்கனா ரனாவத்

கங்கனா ரனாவத்

தனு வெட்ஸ் மனு படத்தில் நடித்த கங்கனா ரனாவத் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் 3 வது முறையாக தேசிய விருதினை கங்கனா கைப்பற்றியிருக்கிறார்.


சஞ்சய் லீலா பன்சாலி

சஞ்சய் லீலா பன்சாலி

பாஜிராவ் மஸ்தானி படத்தை இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி சிறந்த இயக்குநராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, பிரியங்கா சோப்ரா நடிப்பில் வெளியான இப்படம் வசூல் மற்றும் வரவேற்பு என இரண்டிலுமே குறை வைக்கவில்லை.


English summary
63rd National Film Awards: Rajamouli's Baahubali Bags Best Film Award.
Please Wait while comments are loading...