National Film Awards 2019: 'சாவித்திரி' கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது..!

சாவித்திரியாக நடித்த கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

National Film Awards 2019: கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது..!

சென்னை: நடிகையர் திலகம் படத்தில் சிறப்பாக நடித்த நடிகை கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படம் தான் நடிகையர் திலகம். தெலுங்கில் மகாநடி என்ற பெயரில் உருவாக்கப்பட்டது. நாக் அஸ்விக் இயக்கிய இந்த படத்தில் சாவித்திரியாக நடித்து அனைவரது மனதையும் கொள்ளைகொண்டார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

66th National awards: Actress Keerthi suresh won best actress Award

இந்த படத்தில் கீர்த்தியின் நடிப்பை பாராட்டாதவர்களே இல்லை. அந்த படத்திற்காக அவருக்கு நிச்சயம் பல விருதுகள் கிடைக்கும் என அப்போதே பேசப்பட்டது. அதேபோல் பல விருதுகளையும் அவர் பெற்றார்.

இந்நிலையில், தற்போது அவருக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கீர்த்திக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 66வது தேசிய விருதுகள் வழங்கும் விழாவில், குடியரசு தலைவர் கையால் அவருக்கு இந்த விருது வழங்கப்படும்.

கீர்த்தியின் நடிப்பு குறித்து நமது விமர்சனத்தில், "இந்த படத்தை (நடிகையர் திலகம்) முழுவதுமாக தாங்கிப்பிடித்திருப்பவர்கள் கீர்த்தி சுரேஷூம், துல்கர் சல்மானும் தான். கீர்த்தி சுரேஷ் தன்னை சாவித்திரியாகவே மாற்றிக் கொண்டிருக்கிறார். சாவித்திரியாகவே வாழ்ந்திருக்கிறார். பல காட்சிகளில் கீர்த்தி சுரேஷ் தெரிவதேயில்லை. அவ்வளவு இயல்பாக சாவித்திரியை உள்வாங்கி, வெளிக்காட்டி இருக்கிறார்.

சிரிப்பது, அழுவது, மாயா பஜார் ரங்காராவ் குறும்பு, தேவதாஸ் பார்வதி, ஜெமினியின் காதலி, மனைவி, மதுவுக்கு அடிமையானவள் என நமக்கு இன்னொரு சாவித்திரி கிடைத்துவிட்டதாகவே தோன்றுகிறது.

வருங்காலங்களில் சாவித்திரி என்றவுடன் கீர்த்தி சுரேஷின் முகம் ஞாபகத்துக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்தளவுக்கு சாவித்திரியாகவே மாறியிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். உங்களுக்கு நடிக்க வராதுன்னு இனி யாராலும் சொல்ல முடியாது கீர்த்தி. வாழ்த்துக்கள்.", என தெரிவித்திருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X